250 வழக்குகள். 28 வயது இளம்பெண்ணை தேடும் பல மாநில போலீசார். எதற்காக?
Send us your feedback to audioarticles@vaarta.com
28 வயது இளம்பெண் ஒருவரை அதுவும் ஒரு கையை இழந்து ஊனமுற்ற ஒரு பெண்ணை டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநில போலீசார் தேடி வருகின்றனர். அந்த பெண் யார்? எதற்காக இத்தனை மாநில போலீசார் தேடுகின்றனர் என்பது தெரியுமா?
அவர் பெயர் குஷ்பு ஷர்மா. இவரது பெற்றோர்கள் விவாகரத்து காரணமாக பிரிந்துவிட்டதால் தந்தையிடம் வளர்ந்தவர். எட்டாவது வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ரயிலில் செல்லும்போது ஏற்பட்ட ஒரு விபத்தால் வலது கையை இழந்தவர். ஆனால் அழகானவர். இவரது பெயரில் பல போலி ஃபேஸ்புக் பக்கங்கள் உண்டு. அதில் இவர் ஐ.ஏ.எஸ் படித்தவர் என்றும், சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் என்றும் பல வேடங்களில் வலம் வருபவர்.
முதலில் பணக்காரர்களாக பார்த்து ஃபேஸ்புக்கில் நட்பை ஆரம்பிப்பார். பின்னர் ஒரு காபி ஷாப்பில் அறிமுகம். கொஞ்சம் நெருக்கமானவுடன் அவர்களிடம் உள்ள விலையுயர்ந்த பொருட்களை திருடிகொண்டு தலைமறைவு ஆவது. இதுதான் இவரது வழக்கமான தொழில்.
கடந்த 2015ஆம் ஆண்டு டெல்லியில் காரில் வரும் ஒருவரிடம் லிப்ட் கேட்டுள்ளார். காரில் செல்லும்போதே அவரிடம் பேச்சு கொடுத்து தன்பக்கம் ஈர்த்தவர், அவருடன் இன்பமாக இருக்க தயார் என்றும் தனக்கு ஒரு கருத்தடை மாத்திரை வாங்கித்தரும்படியும் கேட்டுள்ளார். உடனே காரில் சென்றவர் மெடிக்கல் ஷாப் அருகே காரை நிறுத்தி கருத்தடை மாத்திரை வாங்க சென்றவுடன் அந்த காரை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆனவர்தான் இந்த குஷ்பு சர்மா. இதேபோல் பல மோசடி புகார்கள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் ஒரு சமயம் டெல்லி போலிசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் திடீரென தப்பித்துவிட்டதாகவும், எப்படி தப்பினார் என்பது இன்று வரை மர்மமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் மட்டுமே இவர் மீது 35 வழக்குகள் உள்ளது.
ஆங்கிலம், இந்தி சரளமாக பேசும் இவரை பல மாநில போலீசார்கள் தேடி வருகின்றனர். அதற்குள் எத்தனை அப்பாவிகள் இவரிடம் ஏமாற போகின்றார்களோ தெரியவில்லை...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com