மனித மூளைக்குள் கம்பியூட்டர் சிப்பா??? கதிகலங்க வைக்கும் புதிய திட்டம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் உள்ள தனியார் விண்வெளித்துறை நிறுவனமான SpaceX இன் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் தற்போது உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். மனித மூளைக்குள் கம்பியூட்டர் சிப்பை பொருத்தி மூளைக்கும் தொழில்நுட்ப இயந்திரத்திற்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் வகையிலான புதிய திட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை இணையதளம் வாயிலாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
இதில் மனித மூளைக்குள் கம்பியூட்டர் சிப்பை பொருத்துவதற்கு முன்னோடியாக பன்றி ஒன்றிற்கு கம்பியூட்டர் சிப் பொருத்தப்பட்டு அதன் செயல்பாடு நேரலையில் கண்காணிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. விண்வெளித் துறையில் தனியார் நிறுவனமான SpaceX அளப்பரிய சாதனையைப் புரிந்துள்ளது. இந்நிலையில் மனித மூளைக்குள் கம்பியூட்டர் சிப் பொருத்தும் புதிய திட்டத்தை நியூராலிங் எனும் நிறுவனம் மூலம் செயல்படுத்தி வருகிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்காக தலைமுடியை விட மிகவும் மென்மையான 3000 மின்முனைகளுடன் கூடிய மெல்லிய வயர்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வயர்கள் மனித மூளைக்குள் பொருத்தப்படும்போது தலைமுடிக்கு அடியில் இருக்கும் என்றும் இந்த வயர்களைப் பயன்படுத்தி மனித மூளையின் 1000 மூளை நரம்பயிலின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிய முடியும் என்றும் எலான் மஸ்க் தகவல் தெரிவித்து உள்ளார். மனித மூளைக்குள் பொருத்தப்படும் கம்பியூட்டர் சிப்களை வைத்து எதிர்காலத்தில் மூளை நரம்பியல் குறைபாடு உடையவர்களை எளிதாகக் குணமாக்க முடியும். அதோடு மறதி, முதுகெலும்பு குறைபாடு போன்ற பெரும் குறைப்பாட்டு நோய்களையும் எளிதில் குணமாக்க முடியும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.
மேலும், தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே இருக்கும் யுகத்தில் மனிதனைக் கட்டுப்படுத்தும் விதமாக எதிர்காலத்தில் செயற்கையான நுண்ணறிவு உருவாக்கப்படும். அதுபோன்ற சமயங்களில் இத்தொழில்நுட்பம் மிகுந்த பயனளிக்கும் என்றும் இத்திட்டம் மனிதகுலத்தின் முன்னோடி அறிவுத் தொழில்நுட்பம் என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டு இருக்கிறார். பன்றி மூளைக்குள் பொருத்தப்பட்ட கம்பியூட்ர் சிப்பை வைத்து சோதனை செய்து பாத்தபோது பன்றியின் உணர்வுகள் அதன் மூளை செயல்பாடு போன்றவற்றை துல்லியமாக கண்டுகொள்ள முடிகிறது என்றும் இத்திட்டம் விரைவில் வெற்றிப் பாதையை அறிவிக்கும் என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டு இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout