ரவுடி பேபி சூர்யா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2 நாட்களாக டிக் டாக் சூர்யா, லக்கி இலக்கியா பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
யுடியூப் தளத்தில் தொடர்ந்து ஆபாசமாக பேசி வரும் சூர்யா என்கிற சுப்புலட்சுமி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
டிக்டாக்-கில் ஆபாச வீடியோக்கள் மற்றும் கெட்டவார்த்தை பேசி வீடியோ வெளியிட்டு மிகவும் பிரபலமானார். தற்போது யுடியூபில் தவறான வார்த்தைகள் பேசியும், அரைகுறை ஆடைகள் அணிந்தும், மற்றவர்களை அசிங்கமா பேசியும், தான் மது அருந்துவது கெத்து என நினைத்தும் வீடியோ பதிவிட்டு வருகிறார். எனக்கு ரசிகர்கள் உள்ளனர் என்று தன்னை தானே பெருமையடித்துக்கொள்ளும் சூர்யா, இவருக்கு அறிவுரை கூறுபவர்களையும் சரமாரியாக திட்டிவருவார்.இந்நிலையில் பல ஊர்களைச் சார்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மொபைல் போனை ஆன்லைன் வகுப்பிற்காக பயன்படுத்துவதாகவும், யுடியூபில் அசிங்கமாக பேசியும், மது அருந்திக்கொண்டு ஆபாச நடவடிக்கைகளை ஈடுபடுவதாகவும் சூர்யா மீது புகார்கள் கொடுத்தும், அறிவுரை கூறியும் வந்தனர். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத சூர்யா, நான் அப்படித்தான் செய்வேன் என கெத்தாக பேசி சிக்காவுடன் சில சில்மிஷ செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சுப்புலட்சுமியின் சேனல்களை முடக்கவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் திருப்பூர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து புகார்கள் வந்து குவிந்தது.இந்தநிலையில் எல்லை பாதுகாப்பு படை வீரர் காளிராஜ், தமிழக காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் புனிதவள்ளி மற்றும் சமூக ஆர்வலர் சுமித்ரா உள்ளிட்டோர் இணைந்து ரவுடி பேபி சூர்யா, சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். "இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் வகையில், சூர்யாவின் பேச்சுக்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளதால், கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.
சமீபத்தில் இலக்கியாவும், சுப்புலட்சுமியும் பேசிய ஆடியோ இணையத்தில் வைரலான நிலையில், காவல் துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா..? என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments