சாதியை இழிவுபடுத்தி பேசிய டிக்டாக் சூர்யா...! இயக்கத்தினர் புகார்..காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்குமா...?

தங்களது சாதி குறித்து இழிவுபடுத்தி பேசியதாக, ரவுடி பேபி சூர்யா மீது குறிஞ்சியர் மக்கள் ஜனநாயக இயக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

யுடியூப் சேனல் மூலம், குறவர் சாதியினரை ரவுடி பேபி சூர்யா இழிவுபடுத்தி பேசியுள்ளார். இதனால் அந்தப்பெண் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, குறிஞ்சியர் மக்கள் ஜனநாயக இயக்கத்தை சேர்ந்த 20 பேர் மதுரை, அழகர் கோவில் சாலையில் உள்ள காவல் நிலையத்தில், காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.அந்த புகார் மனுவில் சூர்யாவின் யுடியூப் சேனலை முடக்க வேண்டும் என்றும், சாதி குறித்து அவதூறாக பேசியதால் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

சமூகவலைத்தள சர்ச்சை:

டிக்டாக்-கில் ஆபாச வீடியோக்கள் மற்றும் கெட்டவார்த்தை பேசி வீடியோ வெளியிட்டு மிகவும் பிரபலமானார். தற்போது யுடியூபில் தவறான வார்த்தைகள் பேசியும், அரைகுறை ஆடைகள் அணிந்தும், மற்றவர்களை அசிங்கமா பேசியும், தான் மது அருந்துவது கெத்து என நினைத்தும் வீடியோ பதிவிட்டு வருகிறார். எனக்கு ரசிகர்கள் உள்ளனர் என்று தன்னை தானே பெருமையடித்துக்கொள்ளும் சூர்யா, இவருக்கு அறிவுரை கூறுபவர்களையும் சரமாரியாக திட்டிவருவார்.யுடியுபில் பெரும்பாலும் நெட்டிசன்கள் இவரை ட்ரோல் செய்து வீடியோக்களை பதிவிட்டு வருவது வழக்கமான ஒன்றாகும்.

இந்நிலையில் பல ஊர்களைச் சார்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மொபைல் போனை ஆன்லைன் வகுப்பிற்காக பயன்படுத்துவதாகவும், யுடியூபில் அசிங்கமாக பேசியும், மது அருந்திக்கொண்டு ஆபாச நடவடிக்கைகளை ஈடுபடுவதாகவும் சூர்யா மீது புகார்கள் கொடுத்தும், அறிவுரை கூறியும் வந்தனர். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத சூர்யா, நான் அப்படித்தான் செய்வேன் என கெத்தாக பேசி சிக்காவுடன் சில சில்மிஷ செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகைதீன் என்பவர், உடல் பாவணைகளும் பேச்சுக்களும் தமிழ்நாட்டில் கலாச்சாரம் மற்றும் சமூக சீரழிவை கெடுப்பதாக உள்ளது என சூர்யா உள்ளிட்ட நால்வர் மீது புகார் கொடுத்திருந்தார். இதன் அடிப்படையில் இவளின் யுடியூப் சேனலை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

டிக்டாக் ஆபாச வீடியோக்கள் மூலம் பிரபலமான சூர்யா, நடுத்தர குடும்ப பெண்களிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி, பாலியல் தொழிலுக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தியாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து பிரபல பத்திரிகை ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண் ஆதாரங்களுடன் பேட்டியளித்திருந்தார். குழந்தைகள் குறித்து கொச்சையாக பேசியதாகவும், சமூக ஆர்வலர்கள் பலரும் சூர்யா மீது புகார் கொடுக்க, காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்குமா என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.

இத்துணை பிரச்சனைகள் வந்தாலும், தனக்கு பின்புலம் இருப்பதாகவும், பெரிய ஆட்களுடன் தொடர்பு உள்ளதாகவும், தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் சவால் விட்டு பேசி வருகிறது இந்த ரவுடி பேபி. இப்படி ரவுசு செய்யும் சூர்யாவின் கொட்டத்தை அடக்க, இணையதள ஆர்வலர்கள் பலரும் கங்கணம் கட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

குறிப்பிட்ட மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு....!

தமிழகத்தில், குறிப்பிட்ட 7 மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், நீலகிரி, சிவகங்கை மற்றும் திருப்பத்தூர்

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இணைந்த பிரபலம்: லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு!

உலகநாயகன் கமலஹாசன் நடிக்கவிருக்கும் 'விக்ரம்' படம் குறித்த தகவல்களை அவ்வப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

ஐஐடி மெட்ராஸ் அழிந்தால் என்ன...? பீட்டர் அல்போன்ஸ் காட்டம்...!

சாதிபேதமற்ற கல்வியை முடியாத IIT மெட்ராஸ் இருந்தால் என்ன? அழிந்தால் என்ன? என, பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் காட்டமாக கூறியுள்ளார்.

எஞ்ஜாய் எஞ்சாமி பாடல் கலைஞர் காலமானார்: தெருக்குரல் அறிவு உருக்கமான இரங்கல்!

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் தெருகுரல் அறிவு உள்பட பலர் பாடிய என்ஜாய் என்ஜாய் என்ற பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது என்பதும்

எனக்கு வர்ற பிரச்சனைக்கு காரணம் நான் உண்மையா இருக்குறதுதான்: சிம்புவின் 'மஹா'டீசர்

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவான 'மஹா' படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த டீசரின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.