தீவிரவாத செயலை தூண்டுகிறார்: நடிகர் சித்தார்த்தை கைது செய்ய புகார்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தங்களுடைய மாநிலத்தில் ஆக்சிஜன் இல்லை என்று யாராவது வதந்தியை கிளப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்
உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் இந்த கருத்து குறித்து டுவிட்டரில் நடிகர் சித்தார்த் சர்ச்சைக்குரிய ஒரு ட்வீட்டை பதிவு செய்திருந்தார். அதில் பொய் சொல்பவர் யாராக இருந்தாலும் அவர்களுடைய கன்னத்தில் அறையலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை மிரட்டும் தொணியில் பேசியதாக நடிகர் சித்தார்த் மீது தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை ஆணையரிடம் அளிக்கப்பட்ட இந்த புகாரில் தீவிரவாத செயலை சித்தார்த் தூண்டி உள்ளதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு மீது சென்னை காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
இந்த நிலையில் தன்னுடைய செல்போன் எண்ணை பாஜகவினர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து தனக்கும் தனது குடும்பத்திற்கும் மிரட்டல் விடுத்ததாகவும் அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments