கலாச்சாரத்தை சீரழிக்கிறார்கள்..! சாதனா, ஜிபி. முத்து மீது காவல் நிலையத்தில் புகார்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
இணையத்தில் பிரபலமாக இருப்பவர்களான டிக்டாக் சாதனா, ஜிபி முத்து, சூர்யா, சிக்கா மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ஜிபி. முத்து....?
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் வசித்து வரும் ஜி.பி முத்து தனது சொந்த ஊரிலே,பழைய கதவு, ஜன்னல்களை சரிசெய்யும் மரக்கடை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ள நிலையில், பொழுதுபோக்கிற்காக தினமும் டிக்டாக் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
டிக்-டாக்கிற்கு மிகவும் அடிமையானதால், அதனால் குடும்ப ரீதியாகவும் ,தொழில் ரீதியாகவும் ஏராளாமான பிரச்சனைகளை சந்தித்தார். தற்கொலை முயற்சிக்கு பின் சிறிது காலம் இணையத்தில் இருந்து இடைவெளிவிட்டே இருந்தார். ஏராளமானோரின் கேலிகிண்டலுக்கு உண்டான ஜிபி. முத்து தன்னுடைய இயல்பான பேச்சால் ரசிகர்களின் மனதை கவர்ந்து, 2-க்கும் மேற்பட்ட யுடியூப் சேனல்கள் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு, தற்போது பெரிய அளவில் பிரபலமாக உள்ளார்.
தனக்கு வரும் கடிதாசிகளை ஜாலியான தோணியில் படிக்கும் இவர், தன்னை அசிங்கமாக பேசுபவர்களை நெல்லை தமிழில் வசைபாடாவும் செய்வார். இவரின் "தமிழ் ஸ்லாங்"கைத்தான், இணையத்தில் மீம்ஸ்களுக்கும், ட்ரோல் செய்யவும் க்ரியேட்டர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ரசிகர்கள் பலரும் இவரை "தலைவர்" என்று அழைப்பார்கள்.
இந்நிலையில் ஜிபி. முத்து பேசிய பேச்சுக்கள் தான், தற்போது இவருக்கு விளைவாகவே வந்துள்ளது. ஆபாசமாக பேசும் யுடியூபர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்து வரும் நிலையில், இவர் மீது தற்போது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் புகார்:
கீழ்க்கரையைச் எம்.எம்.கே.முகைதீன் என்பவர், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
"சமீபகாலமாக வலைதளங்களில் ஆபாச வீடியோ பதிவுகள் அதிக அளவில் வலம் வருகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரிகள் திறக்காததால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இணையத்தில் அதிக நேரம் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திய பேஸ்புக் , ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அப்பாவி மாணவர்களை வழிகெடுத்து அவர்களை ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்கும் நோக்கில் சிலர் 1,ஜிபி முத்து, 2. திருச்சி சாதனா, 3. பேபி சூர்யா, 4.சிக்சர் என்ற சிக்கந்தர் மேலும் பலர் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
ஆபாச பாவணைகள் இந்த வீடியோக்களை லட்சகணக்கானோர் காண்கின்றனர். இவர்களின் உடல் பாவணைகளும் பேச்சுக்களும் தமிழ்நாட்டில் கலாச்சாரம் மற்றும் சமூக சீரழிவை ஏற்படுத்தும். குறிப்பாக இதை காணும் சிறுவர், சிறுமிகளின் மனதை பாதிப்படைய செய்யும் வகைல் ஆபாச பதிவுகள் உள்ளது. இளைய சமுதாயத்தை பாதிக்கும் இத்தகைய இணையதளங்களை கண்டறிந்து அவற்றை தடை செய்ய வேண்டும், மாணவர்கள் மத்தியில் விஷத்தை பரப்பும் கொடிய உள்ளம் கொண்ட ஆபாச பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இதுபோன்ற பதிவுகள் மேலும் தொடராமல் பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் புகாரானது முதல்வரின் தனிப்பிரிவிற்கும் அனுப்பப்பட்டுள்ளதால், ஜிபி முத்து, ரவுடி பேபி சூர்யா, சிக்கா, திருச்சி சாதனா ஆகிய நால்வரும் தற்போது சிக்கலில் மாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments