'கோட்' ரிலீஸ் தினத்தில் விடுமுறை அளித்த நிறுவன உரிமையாளர்.. அஜித்தின் தீவிர ரசிகர்..!

  • IndiaGlitz, [Wednesday,September 04 2024]

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் முன்னணி நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் தீவிர அஜித் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் முதல் நாள் முதல் காட்சியை காண ரசிகர்கள் பலர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் இதற்காக பலர் தங்கள் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முன்னணி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் விக்னேஷ் முரளிதரன் என்பவர் தீவிர அஜித் ரசிகராக இருந்தாலும் தனது நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவருக்கும் நாளைய தினம் ’கோட்’ படத்தை பார்க்க வசதியாக ஒரு நாள் விடுமுறை அளித்துள்ளார். அது மட்டும் இன்றி ஊழியர்களுக்கு சிறப்பு பரிசாக ’கோட்’ படத்தின் டிக்கெட்டையும் அவர் அளித்துள்ளார்.

நாளைய தினத்தில் ஊழியர்கள் எப்படியும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி விடுமுறை எடுப்பார்கள், அதற்கான தேவை இன்றி நாளைய தினத்தை ஊழியர்கள் கொண்டாடும் வகையில் விடுமுறை அளிக்கப்படுவதாக விக்னேஷ் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

விடுமுறை அளித்தது மட்டுமின்றி இலவசமாக டிக்கெட்டும் தங்களது நிறுவன உரிமையாளர் வாங்கி கொடுத்ததை அடுத்து ஊழியர்கள் நாளை மகிழ்ச்சியுடன் ’கோட்’ படத்தை பார்க்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நாளை 'கோட்' ரிலீஸ்.. இன்று அமைச்சர் உதயநிதிக்கு நன்றி சொன்ன அர்ச்சனா கல்பாத்தி.. என்ன காரணம்?

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இன்று இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அமைச்சர் உதயநிதி

எதிர்பார்ப்பை எகிற வைத்த மார்டின் படத்தின் சிங்கிள் பாடல் ஜீவன் நீயே: கண்களுக்கு விருந்து..!

இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, “மார்டின்” படத்திலிருந்து, முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது.  "ஜீவன் நீயே",  எனும் இப்பாடல், மனதை துளைத்து இன்பம் பொங்க

கார்த்தியின் அடுத்த படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கேரக்டரா? ஆச்சரிய தகவல்..!

கார்த்தி நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கேரக்டர் இருப்பதாக கூறப்படுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது வேற லெவல் ட்விஸ்ட்.. 'கோட்' படத்தில் சிஎஸ்கே வீரர்..!

தளபதி விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டம் நடித்துள்ள நிலையில் தற்போது சிஎஸ்கே வீரரும் ஒரு சின்ன கேரக்டரில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளார்

'கூலி' படத்தின் ரஜினி போஸ்டரில் உள்ள 1421 எண்ணிற்கு இதுதான் அர்த்தமா? பரபரப்பு தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு