வெப் சீரிஸ் ரிலீசை அடுத்து விடுமுறை அளித்த நிறுவனம்? அப்படியென்ன ஸ்பெஷல்?
- IndiaGlitz, [Wednesday,September 01 2021]
ஸ்பானிஸ் மொழியில் வெளியாகி உலக ரசிகர்களை ஆட்டிவைத்த வெப் சீரிஸ் Money Heist. வங்கிக் கொள்ளையை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த வெப் சீரிஸ்க்கு உலகம் முழுவதும் ஏராளாமான ரசிகர்கள் அடிமையாகவே மாறிவிட்டனர். இந்த வெப் சீரிஸின் 5 ஆவது சீசன் செப்டம்பர் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது பலருக்கும் தெரிந்ததே.
இந்த வெப் சீரிஸின் ரிலீசையொட்டி ராஜஸ்தானில் இயங்கிவரும் வெர்வ்னஜிக் எனும் மென்பொருள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு விடுமுறையே அளித்துவிட்டது. மேலும் இந்த நாளில் யாரும் பொய்க்காரணத்தைச் சொல்லத் தேவையில்லை. அனைவருக்கும் நெட்ப்ஃளிக்ஸ் கூல் விடுமுறை என்று அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பை அடுத்து அந்த நிறுவனத்தில் பணியாற்றிவரும் பலரும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
Money Heist சீரிஸின் 4 ஆவது சீசன் இந்த ஆண்டின் துவக்கத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இதையடுத்து கொரோனா காலத்தில் இந்திய ரசிகர்களுக்கு இந்த வெப் சீரிஸ் ஒரு பெரும் உற்சாகத்தையே கொடுத்தது எனலாம். அந்த வகையில் இந்த வெப் சீரிஸின் 5 ஆவது சீரிஸ் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது.
அதோடு இந்த வெப் சீரிஸில் வரும் நைரோபி, பெர்லின், போலீஸ் ஆஃபிஸர் காண்டியா, மாஸ்கோ, ஆஸ்லோ, பயணக் கைதியான அரியாட்னா போன்றோர் கடந்த சீரிஸிலேயே உயிரிழந்து விட்டனர். தற்போது இந்த சீரிஸின் திருப்பம் எப்படியிருக்கும் தன்னுடைய குழுவை ஆபத்தில் இருந்து Professor காப்பாற்றி விடுவாரா? என்ற பெருத்த எதிர்பார்ப்புடன் அடுத்த சீரிஸ் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.