ஸ்கூட்டரை போனஸாக வழங்கிய நிறுவனம்… ஆடிப்போன ஊழியர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூரத்தில் செயல்பட்டுவரும் நிறுவனம் ஒன்று தங்களுடைய ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தீபாவளி போனஸாக கொடுத்து அசத்தியிருக்கிறது. இதைப் பார்த்த ஊழியர்கள் கடும் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தீபாவளி என்றாலே பட்டாசு, இனிப்புடன் சேர்த்த போனஸ்ஸும் பிரதான இடம் பிடிக்கிறது. காரணம் போனஸ் தொகை இருந்தால்தான் சிலரது வீடுகளில் தீபாவளியே கொண்டாட முடியும். அப்படியிருக்கும்போது ஒரு நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரையே தீபாவளி போனஸாக வழங்கியிருக்கிறது.
அலையன்ஸ் குரூப் எனப்படும் அந்த நிறுவனம் எம்ராய்டரி செய்யும் மெஷின்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் Okinawa Praisepro நிறுவனம் தயாரித்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தனது 35 ஊழியர்களுக்கு போனஸாக கொடுத்து அசத்தியிருக்கிறது. இதன் விலை ரூ.76,848 என்பதும் குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் விற்கும் விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், அதுவும் பரிசாக கொடுத்தால் எப்படியிருக்கும்? இந்தத் தகவல் வெளியானதையடுத்து, இந்த போனஸ் நமக்கும் கிடைத்திருக்கக் கூடாதா? எனப் பலரும் ஏக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com