'ஜெய்பீம்' படம் பார்த்த நல்லக்கண்ணு: சிவகுமார், சூர்யாவை சந்தித்து வாழ்த்து!
- IndiaGlitz, [Friday,November 26 2021]
சூர்யா நடித்த 'ஜெய்பீம்’ திரைப்படம் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும் ஒரு சில அரசியல் அமைப்புகள் இந்த படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன என்பதும் சூர்யா உள்பட படக்குழுவினர்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சூர்யா மீது ஒரு சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை பல அரசியல் கட்சி பிரமுகர்கள் பார்த்து படக்குழுவினர்களை பாராட்டி வருகின்றனர் என்பதும் இந்த படத்தை முதல் நாளே பார்த்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இரண்டு பக்கங்களுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது தமிழக அரசின் மூத்த அரசியல்வாதியும் சுதந்திர போராட்ட வீரருமான நல்லக்கண்ணு அவர்கள் 'ஜெய்பீம்’ படத்தை பார்த்துள்ளார். படம் பார்த்தபின் அவர் சூர்யா, சிவகுமார் மற்றும் படக்குழுவினர்களை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.