'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தை பாராட்டிய நல்லக்கண்ணு.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

  • IndiaGlitz, [Thursday,May 18 2023]

விஜய் சேதுபதி மேகா ஆகாஷ் நடிப்பில் உருவான ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல ஆண்டுகள் ஆன நிலையில் இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

ஒரு அகதி எப்படி வெளிநாட்டுக்கு போக முடியும்? அப்படி போக முடியும் என்றால் அவங்க அவங்களுக்கு பிடித்த நாட்டிற்கு சென்று வாழ்வார்களே.. நிலம் எதற்காக படைக்கப்பட்டது? இந்த உலகம் எதற்காக படைக்கப்பட்டது? என்பது போன்ற சமூக அக்கறையுள்ள கேள்விகளுடன் இருந்த டிரைலர் இருந்ததால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்ட நிலையில் அதில் பல அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டு இந்த படத்தை பார்த்து பாராட்டினர். அதில் முக்கியமானவர் பழம்பெரும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லக்கண்ணு. இவர் இந்த படத்தை பார்த்து கூறிய போது ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது நம்முடைய தமிழ் இலக்கியத்தின் முதல் வரி. ஐக்கிய நாட்டு சபையிலேயே ’யாதும் ஊரே’ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. தமிழுக்குரிய பெருமையை, தமிழ் இலக்கியத்திற்குரிய பெருமையை இந்த வரிகள் அடையாளம் காட்டி உள்ளது. இந்த காரணத்திற்காக தான் இந்த படத்தை பார்க்க வந்தேன். விஜய் சேதுபதியின் பட குழுவினரும் நல்ல முயற்சி எடுத்துள்ளனர்.

இந்திய நாட்டில் உள்ள சமூகங்கள் தற்போது மாறி உள்ளது, இலங்கையில் உள்ள பிரச்சனையை தமிழ்நாட்டில் பேசுகிறார்கள், தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை வெளி உலகத்தில் பேசுகிறார்கள், இப்படி பிரண்டு கிடக்கும் ஒரு சமூகத்தை ஒரு இசையால், ஒரு திரைப்படத்தால் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கிய படம் என்ற முறையில் இந்த படத்தில் குழுவினர்களை நான் பாராட்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.