நடிகர் சூரியின் ஓட்டல்களில் திடீர் சோதனை: என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
மதுரையில் நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் திடிரென வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சூரி மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் ஓட்டல்கள் நடத்தி வருகிறார். மதுரையில் பல இடங்களில் இந்த ஓட்டலுக்கு கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று திடீரென வணிக வரித்துறை அதிகாரிகள் இந்த ஓட்டலில் சோதனை செய்ததாகவும் இந்த ஓட்டலுக்கு உணவு தயாரிக்க வாங்கும் பொருள்களுக்கு உரிய ஜிஎஸ்டி வரி செலுத்தவில்லை என்றும் புகார் வந்ததால் சோதனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் சோதனை செய்த அதிகாரிகள் சில ஆவணங்களை கைப்பற்றி இன்று காலை வணிகவரித்துறை அலுவலகம் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என உணவகத்தின் மேனேஜர் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இதனையடுத்து இன்று அம்மன் உணவக மேலாளர் வணிகவரித்துறை அதிகாரிகள் முன் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரிக்கு சொந்தமான ஓட்டல்களில் திடீரென வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com