'தளபதி 68' படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.. வெங்கட் பிரபுவிடம் வேண்டுகோள் விடுத்த காமெடி ஹீரோ..!

  • IndiaGlitz, [Tuesday,October 03 2023]

என்னையும் உங்கள் சகோதரர் பிரேம்ஜி போல் நினைத்துக் கொண்டு எனக்கு ’தளபதி 68’ படத்தில் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என காமெடி நடிகராக நடித்து தற்போது ஹீரோவான நடிகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் கசிந்து உள்ளதை ஏற்கனவே பார்த்தோம்.

விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காமெடி நடிகராகி தற்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சதீஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’தளபதி 68’ படத்தில் நடிக்க தனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என வெங்கட் பிரபுவுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தற்போது தான் ஹீரோவாக நடித்துக் கொண்டிருப்பதால் காமெடி கேரக்டரில், சின்ன சின்ன கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்ற தகவல் வெளியாகி வருவது உண்மைக்கு புறம்பானது என்றும் தளபதி விஜய் உடன் இணைந்து நடிக்க வேண்டும் அவருடன் இணைந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதற்காக தான் நான் சென்னை வந்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.

சதீஷின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு ’தளபதி 68’ படத்தில் வெங்கட் பிரபு வாய்ப்பு அளிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கனவே தளபதி விஜய்யுடன் நடிகர் சதீஷ் ‘கத்தி’, ‘பைரவா’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'தலைவர் 170' படத்தில் இணைந்த பிரபல ஹீரோ.. லைகா அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் 'தலைவர் 170'.

எங்க 2 பேருக்கும் ஈக்குவலாக பிளேயர் இருக்காங்களா? விசித்ராவின் கேள்வியால் சர்ச்சை..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் நேற்றைய முதல் நாளே விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து விட்டது என்பதும் போட்டியாளர்களுக்குள்  வாக்குவாதமும்

பூஜை முடிந்ததும் அர்ச்சனா கல்பாத்தியின் பதிவு.. 'தளபதி 68' படம் குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 68வது திரைப்படமான 'தளபதி 68' படத்தின் பூஜை நேற்று நடந்தது என்ற செய்தியை பார்த்தோம். இந்த படத்தின் பூஜை குறித்த தகவலை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

விஜய்யின் 'தளபதி 68' படத்தில் இந்த 5 பிரபலங்கள் உறுதியா? மாஸ் தகவல்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 68' படத்தின் பூஜை நேற்று நடந்ததாக தகவல் வெளியான நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும்  முதல் கட்டமாக இந்த படத்தில்

அடுத்த கட்டத்திற்கு செல்கிறது ஜிவி பிரகாஷ் திரைப்படம்.. குரூப் புகைப்படம் வைரல்..!

ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.