அஜித்தின் 'விசுவாசம்' படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகை

  • IndiaGlitz, [Thursday,June 28 2018]

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விசுவாசம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது. ஐதராபாத்தில் நடந்த இந்த படப்பிடிப்பில் 40% படம் முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் மும்பையில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஆச்சரியம் தரும் வகையில் பிரபல நடிகர், நடிகைகள் இணைந்து வருகின்றனர். நேற்று இந்த படத்தில் காமெடி நடிகர் விவேக் இணைந்ததாக வெளிவந்த செய்தியினை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் கோவை சரளா இணைந்துள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் கோவை சரளா விவேக்கிற்கு ஜோடியாக நடிக்கின்றாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

விஜய்யின் 'சர்கார்' மற்றும் சூர்யாவின் 'என்.ஜி.கே' ஆகிய படங்களுடன் 'விசுவாசம்' படம் தீபாவளி அன்று திரைக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படம் 2019ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளிவரும் என்று கூறப்படுகிறது

அஜித், நயன்தாரா, யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, போஸ் வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'விசுவாசம்' படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.
 

More News

சிம்பு-வெங்கட்பிரபு படத்தில் இணைந்த மேலும் ஒரு ஹீரோ

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

சிம்பு-வெங்கட்பிரபு படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் 'பில்லா 3' திரைப்படம் உருவாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சிம்புவும் வெங்கட்பிரபுவும் இணைவது தற்போது உறுதியாகியுள்ளது.

முரண்டு பிடிக்கும் மும்தாஜால் பிக்பாஸ் வீட்டில் சர்ச்சை

பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வரும் எஜமானர்-வேலைக்காரி டாஸ்க் அந்த வீட்டையே இரண்டாக பிரித்துவிடும் போல் தெரிகிறது. வேலைக்காரி டாஸ்க்கால் அதிகம் கடுப்பானாவ்ர்கள் மும்தாஜ் மற்றும் மமதியும் தான்.

சேலத்தில் அப்படி என்ன தேவை இருக்கு? பசுமை சாலை குறித்து கார்த்தி

சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் எதிர்ப்புகளை மீறி அரசு இந்த சாலை அமைப்பதில் தீவிரமாக உள்ளது.

ரஜினிகாந்த் தமிழகத்திற்கு ஏற்ற தலைவன் அல்ல: நாஞ்சில் சம்பத்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு அரசியலில் குதிக்கவுள்ளதாக அறிவித்த பின்னர் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து கட்சி தலைவர்களும் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.