வீட்டில் மனைவி தூக்கில் தொங்கியது கூட தெரியாமல் போலீஸில் புகாரளித்த காமெடி நடிகர்!

  • IndiaGlitz, [Tuesday,December 20 2022]

பிரபல காமெடி நடிகர் ஒருவர் தனது மனைவி வீட்டில் தூக்கில் தொங்கியது கூட தெரியாமல் தனது மனைவியை காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத் திரையுலகின் காமெடி நடிகர் உல்லாஸ் பந்தளம் என்பவர் பத்தனம்திட்டா காவல்துறையில் தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ய அவரது வீட்டிற்கு சென்றபோது அவரது வீட்டிலேயே அவருடைய மனைவி ஆயிஷா தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆயிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் ஆயிஷாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்டமாக உல்லாஸ் பந்தளம் மனைவி ஆயிஷா வீட்டில் தூக்கில் தொங்கியது கூட தெரியாமல் காவல் நிலையத்தில் வந்து புகார் அளித்தது ஏன்? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் மம்முட்டி உள்பட பல பிரபலங்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் நடிகர் உல்லாஸ் பந்தளம் என்பதும், அவர் தற்போது ஒருசில படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.