இளையராஜா கடலில் கண்டெடுத்த முத்துதான் அனிருத்: விவேக்

  • IndiaGlitz, [Wednesday,November 02 2016]

தனுஷ் நடித்த விஐபி' படத்தில் அவருடைய தம்பியாக நடித்த ரிஷிகேஷ் நாயகனாக நடிக்கும் படம் 'ரம்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது.
அனிருத் இசையமைத்த இந்த படத்தின் பாடல்களை ரிலீஸ் செய்யும் இந்த விழாவில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா, இயக்குநர் சாய் பரத், இசையமைப்பாளர் அனிரூத், ஹ்ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, நரேன், விவேக், பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய விவேக், 'ரம்' படத்தின் இளம் கூட்டணியுடன் பணியாற்றியதால் தானும் இளமையாக மாறியுள்ளதாகவும், இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இளையராஜா என்னும் இசை கடலில் கண்டெடுத்த முத்து என்றும் கூறினார்.
இந்த விழாவில் இசையமைப்பாளர் அனிருத் பேசியபோது, '"பொதுவாகவே பேய் படங்கள் என்றால் எனக்கு அவ்வளவு பயம்.... அதுமட்டுமன்றி, 13 ஆம் நம்பர் என்பது பேய்களை குறிக்கும் எண் என்பதால், அந்த எண்ணின் மீதும் எனக்கு நயம் தான்..... ஆனால் தற்போது நான் இசையமைத்திருக்கும் இந்த 'ரம்', என்னுடைய 13 ஆவது படம்.... அதுவும் பேய் படம்...." என்று கூறினார்.

More News

தீபாவளியை அடுத்து கிறிஸ்துமஸ், பொங்கல் விருந்து தரும் விஜய்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பதை பார்த்தோம்....

கமல்-கவுதமி பிரிவு குறித்து ஸ்ருதிஹாசன் தரப்பின் விளக்கம்.

உலக நாயகன் கமல்ஹாசனை கனத்த மனதுடன் பிரிவதாக நேற்று நடிகை கவுதமி அறிவித்தவுடன் இந்த பிரிவுக்கான காரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவியது...

சசிகுமாரின் அடுத்த பட அட்டகாசமான டைட்டில்

சசிகுமார் தயாரித்து நடித்த 'கிடாரி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் புதிய பட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்...

பிரபல இளம் இசையமைப்பாளருக்கு திருமணம்.

மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பின்னர் சூர்யாவின் 'பசங்க 2'...

தனுஷ்-செளந்தர்யா ரஜினி படத்தில் 2 பிரபல நாயகிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இந்தியாவின் முதல் மோஷன் கேப்ட்சர் திரைப்படமான 'கோச்சடையான்'...