கை, கால் செயலிழந்து படுத்த படுக்கையாய் இருக்கும் காமெடி நடிகர்.. வடிவேலு உதவி செய்வாரா?

  • IndiaGlitz, [Tuesday,June 25 2024]

ஒரு கை மற்றும் ஒரு கால் செயல் இழந்து படுத்த படுக்கையாக தமிழ் காமெடி நடிகர் ஒருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் தனக்கு உதவி தேவை என்று வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தவர் காமெடி நடிகர் வெங்கல்ராவ். கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவருக்கு தற்போது ஒரு கை மற்றும் ஒரு கால் செயல் இழந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற பண வசதி இல்லை என்றும், தனக்கு ஒரு கை கால் செயல்படவில்லை என்றும் பேசக்கூட முடியவில்லை என்றும் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகவும் எனவே தனக்கு சினிமா கலைஞர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். வடிவேலு உடன் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ள நிலையில் வடிவேலு உள்பட சினிமா கலைஞர்கள் அவருக்கு உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த வெங்கல்ராவ், முதலில் ஃபைட் யூனிட்டில் பணி செய்த நிலையில் அதன்பின்னர் வடிவேலுவால் அடையாளம் காணப்பட்டு தன்னுடைய நகைச்சுவை குழுக்களில் ஒருவராக அவரை சேர்த்துக் கொண்டார். இருப்பினும் அவருக்கு பட வாய்ப்பு மிகவும் குறைவாக கிடைத்தது என்பதும் சம்பளமும் குறைவாக கிடைத்ததால் தற்போது அவர் வறுமையில் வாழ்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வெங்கல்ராவ் தனது சொந்த ஊரான விஜயவாடாவில் இருக்கும் நிலையில் அவர் தனக்கு உதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கையை ஏற்று திரை உலக பிரபலங்கள் அவருக்கு உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

கண்ணீர் தழும்ப அப்துல் ஹமீது வெளியிட்ட வீடியோ..! என்ன ஆச்சு?

பிரபல இலங்கை வானொலி தொகுப்பாளர் அப்துல் ஹமீது நேற்று திடீரென காலமானதாக வதந்தி பரவிய நிலையில் அவரது தரப்பில் அப்துல் ஹமீது உயிரோடு இருப்பதாகவும் வதந்தியை நம்ப வேண்டாம்

'சர்தார் 2' நாயகி மாற்றப்படுகிறாரா? ரூ.100 கோடி படம் கொடுத்தும் ராஷி கண்ணாவுக்கு என்ன ஆச்சு?

கார்த்தி நடித்த 'சர்தார்' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த ராஷி கண்ணா நாயகியாக நடிக்கவில்லை

அஜித் சென்ற கார் அந்தரத்தில் சுழன்றதால் பரபரப்பு.. 'விடாமுயற்சி' படப்பிடிப்பின் திகில் வீடியோ..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் அஜித் உட்பட பலர் இந்த படப்பிடிப்பில் கலந்து

சனி வக்ர பெயர்ச்சி 2024 பலன்கள் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் கணிப்பு..!

சனி வக்ர பெயர்ச்சி 2024 பலன்கள் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் கணிப்பு..!

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வாராவாரம் ஆரவாரம் செய்து வரும் உப்பு புளி காரம்!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், சமீபத்தில் வெளியான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'உப்பு புளி காரம்', குடும்பங்கள் கொண்டாடும் அனைத்து அம்சங்களுடன்,