காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்! அதிர்ச்சியில் சின்னத்திரை 

  • IndiaGlitz, [Thursday,September 10 2020]

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கலக்கப் போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி திடீரென உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

‘கலக்கப்போவது யாரு’ சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடிவேல் பாலாஜி, வடிவேல் போலவே பேசுவதில் திறமை மிக்கவர். குறிப்பாக வடிவேலு நடித்த கேரக்டர்களான நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா ஆகிய கேரக்டர்களை அச்சு அசல் வடிவேல் போலவே அவர் செய்ததால் அவருக்கு வடிவேல் பாலாஜி என்ற பெயர் ஏற்பட்டது

மேலும் ‘அது இது எது’ நிகழ்ச்சியிலும் சிரிச்சா போச்சு என்ற பகுதியில் கலந்து கொண்டு போட்டியாளர்களை சிரிக்க வைப்பதில் வல்லவராக இருந்தார். மேலும் நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படத்திலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவேல் பாலாஜி கடந்த சில நாட்களாக உடல் நலம் இன்றி சிகிச்சை பெற்று வந்ததாகவும், திடீரென அவர் சிகிச்சையின் பலனின்றி சற்றுமுன் காலமானதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது