காமெடி நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்; திரையுலகினர் அஞ்சலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
காமெடி நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ரேணிகுண்டா உள்பட பல திரைப்படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் தீப்பெட்டி கணேசன். இவர் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பெட்டி கணேசன் காலமான தகவலை இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன். அன்புநிறை இதய அஞ்சலி கணேசா.
கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் தீப்பெட்டி கணேசன் வறுமையில் இருந்ததாகவும் நடிகர் சங்கம் மற்றும் பிரபல நடிகர்கள் தனக்கு உதவி செய்ய வேண்டுமென்றும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பதும் அந்த வீடியோ வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன்.அன்புநிறை
— R.Seenu Ramasamy (@seenuramasamy) March 22, 2021
இதய அஞ்சலி கணேசா.. pic.twitter.com/TWQIHHgElt
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments