நாங்க சோத்துக்கு கஷ்டபடுறத நீ வந்து பாத்தியா ? பயில்வான் ரங்கநாதனுக்கு சுருளிராஜன் மனைவி பதிலடி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் பயில்வான் ரங்கநாதன், சுருளி ராஜனுக்கு மது பழக்கம் இருந்தது என்றும் சோத்துக்கு அவரது குடும்பம் கஷ்டப்பட்டதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய நிலையில் நாங்கள் சோத்துக்கு கஷ்டப்பட்டோம் என்பதை நீ வந்து பார்த்தியா என நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சுருளி ராஜன் மனைவி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சுருளி ராஜன் குறித்து சமீபத்தில் அவரது மனைவி முத்துலட்சுமி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருந்தார். அப்போது பயில்வான் ரங்கநாதன், சுருளி ராஜன் மதுவுக்கு அடிமையானதால் தான் இளமையில் மரணம் அடைந்தார் என்றும் கூறியது குறித்து கருத்து கூறிய முத்துலட்சுமி அந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்தார்.
வாய் இருக்கு என்பதற்காக எதையும் பேசாதீர்கள், பத்திரிகைகளில் கண்டபடி எழுத வேண்டாம், பக்கத்தில் இருந்து பார்த்தது போல் உளர வேண்டாம், நாங்கள் சாப்பாடுக்கு கஷ்டப்படுகிறோமா? நீங்கள் வந்து பார்த்தீர்களா? என் வீட்டை வந்து பாருங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்மேலும் தனது கணவருடன் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் இருந்த நெருக்கமான பழக்கம், சுருளி ராஜன் வீட்டிலிருந்து வரக்கூடிய கம்மங்கூழ் மற்றும் வெங்காயம் போட்ட மோரை ரஜினிகாந்த் விரும்பி குடிப்பது உள்ளிட்ட பல மறக்க முடியாத நினைவுகளை நம்மிடம் அவர் பகிர்ந்து உள்ளார். அது குறித்த முழு வீடியோ இதோ:
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com