நாங்க சோத்துக்கு கஷ்டபடுறத  நீ வந்து பாத்தியா ? பயில்வான் ரங்கநாதனுக்கு  சுருளிராஜன் மனைவி பதிலடி..!

  • IndiaGlitz, [Thursday,August 22 2024]

நடிகர் பயில்வான் ரங்கநாதன், சுருளி ராஜனுக்கு மது பழக்கம் இருந்தது என்றும் சோத்துக்கு அவரது குடும்பம் கஷ்டப்பட்டதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய நிலையில் நாங்கள் சோத்துக்கு கஷ்டப்பட்டோம் என்பதை நீ வந்து பார்த்தியா என நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சுருளி ராஜன் மனைவி பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சுருளி ராஜன் குறித்து சமீபத்தில் அவரது மனைவி முத்துலட்சுமி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருந்தார். அப்போது பயில்வான் ரங்கநாதன், சுருளி ராஜன் மதுவுக்கு அடிமையானதால் தான் இளமையில் மரணம் அடைந்தார் என்றும் கூறியது குறித்து கருத்து கூறிய முத்துலட்சுமி அந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்தார்.

வாய் இருக்கு என்பதற்காக எதையும் பேசாதீர்கள், பத்திரிகைகளில் கண்டபடி எழுத வேண்டாம், பக்கத்தில் இருந்து பார்த்தது போல் உளர வேண்டாம், நாங்கள் சாப்பாடுக்கு கஷ்டப்படுகிறோமா? நீங்கள் வந்து பார்த்தீர்களா? என் வீட்டை வந்து பாருங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்மேலும் தனது கணவருடன் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் இருந்த நெருக்கமான பழக்கம், சுருளி ராஜன் வீட்டிலிருந்து வரக்கூடிய கம்மங்கூழ் மற்றும் வெங்காயம் போட்ட மோரை ரஜினிகாந்த் விரும்பி குடிப்பது உள்ளிட்ட பல மறக்க முடியாத நினைவுகளை நம்மிடம் அவர் பகிர்ந்து உள்ளார். அது குறித்த முழு வீடியோ இதோ:

 

More News

கிரிக்கெட் அணி உரிமையாளராகும்  கீர்த்தி சுரேஷ்.. சமந்தாவும் ஒரு அணி உரிமையாளர்..!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளான சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் விளையாட்டுத் துறையில் களம் இறங்கி இருப்பதாகவும் அவர்கள் விளையாட்டு

சொர்க்கத்துக்கு யார் செல்வார்.? நரகத்துக்கு யார் செல்வார்.? -ரங்கராஜன் நரசிம்மன்

பிரபல ஆன்மீக பேச்சாளர் ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த இரண்டாவது பேட்டியில் ஆன்மீகத்தின் அடிப்படை கேள்விகளுக்கு ஆழமான விளக்கம் அளித்துள்ளார்.

மிகப்பெரிய சோதனை செய்திருக்கிறார்கள்.. மஞ்சுவாரியர் படம் குறித்து அனுராக் காஷ்யப்..!

மஞ்சுவாரியர் நடித்த மலையாள திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் இது ஒரு பெரிய சோதனை

பா ரஞ்சித் அடுத்த படத்தின் ஹீரோ இவரா? அப்ப வெற்றிமாறன் படம் என்ன ஆச்சு?

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'தங்கலான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் தற்போது அவர் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டதாக

அமரர் ஊர்தி, ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு இலவச டிக்கெட்: நாளை வெளியாகும் படக்குழு அறிவிப்பு..!

அமரர் ஊர்தி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டும் டிரைவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என நாளை வெளியாகும் திரைப்படத்தின் படக்குழு அறிவித்துள்ளது.