டுவிட்டரில் இணைந்த பழம்பெரும் காமெடி நடிகர்

உலகம் முழுவதும் உள்ள நடிகர், நடிகைகள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இணைந்து தங்களது ரசிகர்களுக்கு அவ்வப்போது தகவல்களை அளித்து வருகின்றனர். தாங்கள் நடிக்கும் படம் மற்றும் சமூக கருத்துக்களை அவர்கள் தெரிவித்து வருவதால் நடிகர் நடிகைகள் உள்பட திரையுலகத்தினர் சமூகவலைத்தள கணக்கில் லட்சக்கணக்கில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் காமெடியில் கொடி கட்டி பறக்கும் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்களும் தற்போது டுவிட்டர் என்ற சமூக வலைதளங்களில் இணைந்து உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

நான் உங்கள் காமெடி நடிகர் செந்தில். கொரோனா வைரஸ் பரவுவதால் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கடைசியாக நான் சூர்யா தம்பி உடன் இணைந்து ’தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்தேன். கூடிய விரைவில் இன்னும் பல படங்களில் நடித்து உங்களை சந்தோஷம் ஆக்குவேன் என்று நம்புகிறேன். அதுவரை உங்களுடன் தொடர்பில் இருக்க ஆசைப்பட்டேன். எனவே தான் தற்போது ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்கி உள்ளேன். அனைவரின் ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றி’ என்று நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்

நகைச்சுவை நடிகர் செந்தில் சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளது திரையுலக ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 

More News

கொரொனோ கிடக்கட்டும், இதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிங்கய்யா! விஜய்சேதுபதியின் நக்கல் டுவீட்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஒன்றரை மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் வேலைக்கு செல்லாமல் பசியால் வாடுகின்றனர்.

சிங்கப்பூரில் வேலைப்பார்த்த 4,800 இந்தியத் தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு!!!

சிங்கப்பூரில் தங்கி வேலைப்பார்த்து வரும் 4,800 இந்தியத் தொழிலாளர்களுக்கு கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய உயர் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி ஆய்வுக்கு நிதித்திரட்டும் உலகின் மெகா கூட்டணி!!! தவிர்த்த அமெரிக்கா, ரஷ்யா!!!

கொரோனா தடுப்பூசி மற்றும் சிகிச்சை குறித்த ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் உலக நாடுகளை ஒருங்கிணைந்து உலகளாவிய கூட்டணி ஒன்றை  ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கி இருக்கிறது.

ஊரடங்கு விடுமுறையில் நாற்று நடும் தமிழ் நடிகை

கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள ஊரடங்கு விடுமுறையால் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் பிரபல நடிகைகள் பலர் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் விதவிதமான வீடியோக்களை

நாகர்கோயில் காசியால் ஏமாந்த நடிகரின் மகள், இன்ஸ்பெக்டரின் மகள் யார்? தீவிர விசாரணை

பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான கல்லூரி பெண்களை ஏமாற்றிய கயவர்களின் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு குற்றம் நாகர்கோயிலும் நடந்துள்ளது.