காமெடி நடிகர் சதீஷ் திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,September 20 2019]

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் சதீஷூக்கு இன்று நிச்சயதார்த்தம் ஆனதாக இணையதளங்களில் வெளிவந்த புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது நிஜ திருமண நிச்சயதார்த்தமா? அல்லது படப்பிடிப்புக்காக எடுத்த காட்சியா? என்ற குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது

சதீஷுக்கு உண்மையில் திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாகவும், மணப்பெண்ணும் சினிமா துறையை சேர்ந்தவர் என்றும் இந்த திருமணம் பெற்றோர்கள் முடிவு செய்த திருமணம் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது

மேலும் மணப்பெண் யார்? திருமணம் எப்போது? என்பது குறித்த தகவல்களை விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து சதீஷ் அறிவிக்கவிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது