பழம்பெரும் நகைச்சுவை நடிகர் ராக்கெட் ராமநாதன் காலமானார்.

  • IndiaGlitz, [Wednesday,September 05 2018]

பழம்பெரும் நகைச்சுவை நடிகரும் பலகுரல் மன்னனுமான ராக்கெட் ராமநாதன் காலமானார். அவருக்கு வயது 74

சென்னைத் தொலைக்காட்சியிலும், பொது நிகழ்ச்சிகளிலும் மிமிக்ரி கலைஞராக விளங்கிய ராக்கெட் ராமநாதன், 'ஸ்பரிசம்' என்ற படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அதன்பின்னர் ஒருபுல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, வளர்த்தகடா, மண்சோறு, கோயில்யானை, நாம், வரம் உட்பட ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார். கமல்ஹாசன் மற்றும் விஜயகாந்துடன் 'மனக்கணக்கு' என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் போன்ற விருதுகளை பெற்றவர்.

மறைந்த நடிகர் ராக்கெட் ராமநாதனுக்கு பானுமதி என்ற மனைவியும், சாய்பாலா என்ற மகளும், சாய்குரு பாலாஜி என்ற மகளும் உள்ளனர். இவருடைய இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

More News

விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் தனுஷ்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ரஜினி படம் பார்த்ததால் குணமான இதயநோய் சிறுவன்: டாக்டர்கள் ஆச்சரியம்

பெங்களூரை சேர்ந்த சிறுவனுக்கு சமீபத்தில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த சிறுவன் தொடர்ந்து ரஜினி படத்தை பார்த்ததால் விரைவில் குணமானதாக

சோபியாவின் டுவிட்டர் பக்கம் திடீர் மாயம்

சென்னை-தூத்துகுடி விமானத்தில் சாதாரண சின்ன சண்டையாக ஆரம்பித்த தமிழிசை-சோபியா விவகாரம் அதன் பின்னர் காவல்துறையில் புகார், கைது, இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான டிரெண்ட்

சோபியா விடுதலைப்புலியா? சுப்பிரமணியன் சுவாமி சந்தேகம்

கனடாவில் விடுதலைப்புலிகள் அதிகம் இருப்பதால் கனடவில் படித்து கொண்டிருக்கும் சோபியாவும் விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டவராக இருக்கலாம் என சுப்பிரமணியன் சுவாமி பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பராமரிப்பு இல்லாததால் சரிந்து விழுந்த மேம்பாலம்: கொல்கத்தாவில் பரபரப்பு

மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் கடந்த 1970ஆம் ஆண்டு கட்டிய பாலம் ஒன்று இன்று திடீரென சரிந்து விழுந்ததால் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் பல இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளது.