ரோபோ சங்கர் மகளின் திருமணத்தில் இவ்வளவு சர்ச்சையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியின் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் மேடை சிரிப்புரைனர் மற்றும் சினிமாவில் தமிழ் திரைப்படங்களில் முக்கியமான குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் ரோபோ சங்கர் அவர்களுடைய மகள் இந்திராஜாவிற்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தன.இவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் ,சினிமாவிலும் நடித்து வருகிறார்.
இவரது ஸ்டாண்ட் அப் காமெடி அவரது வாழ்வில் ஒரு நல்ல திருப்பு முனையை ஏற்படுத்தியது.மேலும் மிமிகிரி கலைஞராகவும் சிறந்து விளங்கியவர்.2013 ஆம் ஆண்டு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் நடித்தது அவருக்கு ஒரு இடைவெளியை கொடுத்தது.
பிறகு யாருடா மகேஷ் ,கப்பல் போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து தன்னை முன்னேற்றி கொண்டவர்.எதிர்மறையான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.இவர் நடிகர் தனுஷ் உடன் இனைந்து நடித்த மாரி திரைப்படம் இவருக்கு தனி வெற்றியை கொடுத்தது.கொஞ்சம் கொஞ்சமாக தன்னையும் தன் திறமையையும் மேம்படுத்தி கொண்டவர்.
மேலும் அவரது உடல் மொழி மற்றும் அவர் கூறும் ஒன் லைனர் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.மக்களால் நேர்மறையாக விமர்சிக்கப்பட்டார்.இவரை போலவும் இவரது மகளையும் திறமைக்கு அருகிலேயே வைத்து வளர்த்தார்.அதனுடன் சராசரியாக இல்லாமல் தனித்துவமாக மகளை வளர்த்தார்.இவரோடு கலந்த நடிப்பு திறமையை தனது மகளுக்கும் கொடுத்து,அவரும் தனது நடிப்பை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.அந்த வகையில் இந்திரஜா நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்து தனது மொத்த திறமையையும் வெளிக்காட்டி வெற்றி சூடிக்கொண்டார்.
எல்லாவற்றிக்கும் மேலாக தனது மகளின் திருமணத்தையும் கோலாகலமாக நடத்தி முடித்தார்.இந்த திருமண வைபோகத்தில் நடிகர் கமல ஹாசன்,நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.இதற்கிடையில் பல சர்ச்சைகளும் எழுந்தன.
தனது மகளை அதிக வயது உடைய ஆணுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார் என பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் மணமகன் கொடுத்த முத்தம் தொடர்பாக வந்த சர்ச்சை போன்ற சில பிரச்சினைகளுக்கு மத்தியில் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்தார் ரோபோ சங்கர்.
சமீப காலத்தில் நடிகர் ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவி உடல் எடை குறைப்பு குறித்து சமூக வலைத்தளத்தில் பல கேள்விகள் எழுந்தன.அவருக்கு ஏதோ நோய் ஏற்பட்டு அதனால் உடல் எடை குறைந்தன என பல சர்ச்சைகளை கிளப்பினர்,அவர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் கூட சில உருக்கமான வார்த்தைகளை பதிவு செய்தார்.அதை எல்லாம் தாண்டி ஒரு நேர்காணலில் தனது மகளுக்கு விரைவாக திருமணம் நடத்த போவதாகவும் தனது சொந்தத்திலேயே ஒரு பையனை பேசி முடிக்க போவதாகவும் சொல்லி இருந்தார்.
இந்திரஜா திருமணத்தின்போது அவரது தோழி அக்சயா கிம்மி அவருக்கு மிகவும் பக்க பலமாக இருந்தார்.திருமணத்தில் நடனம் ஆடி அவரை உற்சாகப்படுத்தினார்.மெஹந்தி செரிமோனி,டான்ஸ்,பிரபலங்கள் வருகை என தன்னுடைய மகளின் திருமணத்தை சிறப்பாகவும் வைபோகவும் நடத்தி முடித்தார்.
இது குறித்து இவரும் இவரது குடும்பமும் சமீபத்தில் அவள் க்ளிட்ஸ் யூடுயுப் சேனலில் அளித்த பேட்டியில் கொடுத்த விளக்கத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com
Comments