கோவை சரளா, மனோவை அடுத்து அரசியலில் நுழைந்த திரை நட்சத்திரம்

  • IndiaGlitz, [Sunday,March 10 2019]

தேர்தல் சீசனில் கோலிவுட் திரையுலகினர் அரசியலில் நுழைந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் நடிகை கோவை சரளா, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும், பிரபல பாடகர் மனோ, டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவிலும் இணைந்த நிலையில் இன்று ஒரு திரைநட்சத்திரம் அதிமுகவில் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவராக ரவிமரியா , அமைச்சர் ஜெயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இனைந்தார். இவர் அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

அதிமுகவில் நடிகர் ரவிமரியா இணையும் நிகழ்ச்சியில் அமைச்சர் மாபா பாண்டியராஜன், ஜெயவர்தன் எம்பி, ஆவடி குமார், நடிகர் ரங்கநாதன் ஆகியோர் உடனிருந்தனர். தேர்தல் நடைபெற இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் இன்னும் எத்தனை திரை நட்சத்திரங்கள் எந்தெந்த கட்சியில் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

பார்த்திபனின் அடுத்த பட டைட்டிலை வெளியிட்ட விஜய்சேதுபதி

கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர், இயக்குனர் பார்த்திபன் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' என்ற படத்தை இயக்கிய பின்னர் மூன்று வருடங்கள் கழித்து தற்போது ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

ஆர்யாவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷாவை நாளை திருமணம் செய்யவுள்ள நிலையில் சற்றுமுன் அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது

தமிழ்ப்புத்தாண்டு ரிலீஸ் பட்டியலில் இணைந்த பிரபுதேவா படம்

தமிழ்ப்புத்தாண்டு தின விடுமுறை நாளில் ஒருசில படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் 'தேவி 2' திரைப்படமும் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பிரபல நடிகரின் படத்திற்காக பாடல் பாடிய சித்தார்த்

விஜய், தனுஷ், சிம்பு உள்பட தமிழ் சினிமாவின் பெரும்பாலான நடிகர்கள் அவ்வப்போது பாடல்கள் பாடி வருவது தெரிந்ததே. அந்த வகையில் தன்னுடைய படங்களில் மட்டுமின்றி

'நீயா 2'வின் ஆரம்ப புள்ளி 'நாகினி' தான்: இயக்குனர் எல்.சுரேஷ் 

ஜெய், வரலட்சுமி, ராய்லட்சுமி, கேதரின் தெரசா நடிப்பில் எல்.சுரேஷ் இயக்கிய 'நீயா 2' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இன்று சென்னையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.