தளபதி விஜய்யை கலாய்த்த காமெடி நடிகர்
- IndiaGlitz, [Tuesday,March 20 2018]
தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பை நடத்த தயாரிப்பாளர் சங்கத்திடம் சிறப்பு அனுமதி பெற்று இன்று படப்பிடிப்பு நடந்தது. இதுகுறித்து ஒருசில தயாரிப்பாளர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ஒருசில நியாயமான காரணங்களால் 'தளபதி 62' உள்பட மூன்று படங்களுக்கு மட்டும் ஒரிரு நாட்கள் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதை காமெடி நடிகர் கருணாகரன் தனது சமூக வலைத்தளத்தில் கலாய்க்கும் வகையில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. 'தமிழன்னு சொன்னாலே திமிர் ஏறும் என்பது உண்மையா? இல்லை வெறும் பாட்டு மட்டும்தானா என்று விஜய்யின் பாடலை வைத்தே விஜய்யை மறைமுகமாக கலாய்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து விஜய் ரசிகர்கள் கருணாகரனின் இந்த பதிவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். விஜய் 62' படக்குழுவினர் வேலைநிறுத்தத்திற்கு மதிப்பு கொடுத்து அத்துமீறாமல் உரிய அனுமதி வாங்கியே படப்பிடிப்பு நடத்துகின்றனர், அதுவும் ஒரே ஒரு நாள்தான். இந்த அடிப்படை உண்மையை கூட புரிந்து கொள்ளாமல், இதற்கும் தமிழனின் ஒற்றுமைக்கும் முடிச்சு போட்டு அரை வேக்காட்டுத்தனமாக கருணாகரன் பதிவு செய்துள்ளதாக விஜய் ரசிகர்கள் அவருக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் இந்த டுவீட்டுக்கு உண்மையான அர்த்தம் என்ன? என்பதை கருணாகரனே விளக்கினால் மட்டுமே உண்மை விளங்கும்