அஜித்தின் அர்ப்பணிப்பு என்னை ஆச்சரியப்படுத்தியது. கருணாகரன்

  • IndiaGlitz, [Friday,July 28 2017]

அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தில் காமெடி நடிகராக கருணாகரன் நடித்துள்ளார் என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று காலை முதல் கருணாகரனின் 'விவேகம்' ஸ்டில்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த ஸ்டில்களை பார்த்து காமெடி நடிகரை கூட ஸ்டைலிஷாக இயக்குனர் சிவா மாற்றியுள்ளதாக அஜித் ரசிகர்கள் புகழ்ந்து டுவிட்டரில் ஸ்டேட்டஸ் போட்டு வருகின்றனர். இதுகுறித்து கருத்து கூறிய கருணாகரன், ' இந்தப் படத்தில் நான் ஸ்டைலாக இருக்க காரணமான சிவா சாருக்கும் அனுவர்த்தனுக்கும் அநேக நன்றிகள் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து கருணாகரன் கூறியபோது, 'அஜித்தின் அர்ப்பணிப்பு உணர்வை அருகில் இருந்து பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். செர்பியாவில் மைனஸ் டிகிரி வெப்பநிலை இருந்தாலும் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஜிம்முக்கு சென்று வொர்க் அவுட் செய்வார் அஜித்.

படப்பிடிப்பின்போது அவர் அருகில் இருந்தாலே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். ஒருமுறை நான் ஒரு பெரிய வசனம் பேச வேண்டும்.தொடர்ந்து சொதப்பி கொண்டே வந்தேன். உடனே அஜித் என்னை தனியே அழைத்து வாங்க நாம பிராக்டிஸ் செய்யலாம் என்று அவரும் என்னுடன் பயிற்சி எடுத்தார்.

'வீரம்' படத்திலேயே எனக்கு இயக்குனர் சிவா வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அந்த வாய்ப்பை ஏற்று கொள்ள முடியாத நிலையில் அப்போது இருந்தேன். இந்த நிலையில் 'விவேகம்' படத்தில் வாய்ப்பு கொடுத்தபோது சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டேன்' என்று கருணாகரன் கூறினார்.