நகைச்சுவை நடிகராக மாறி வருகிறார் கமல்ஹாசன். அமைச்சர் கடம்பூர் ராஜூ

  • IndiaGlitz, [Friday,August 18 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே தனது டுவிட்டர் மூலம் தமிழக அரசுக்கு எதிராக அதிரடி குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். இதற்கு பதில் சொல்ல வேண்டிய அமைச்சர்கள் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து வருவதோடு அவ்வப்போது ஒருமையிலும் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று ஒரு டுவீட்டை கமல்ஹாசன் பதிவு செய்திருந்தார். இந்த டுவீட் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறியுள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, "கமலஹாசன் சிறந்த நடிகர். ஆனால், தேவையில்லாமல் அரசியல் கருத்து கூறி நகைச்சுவை நடிகராக மாறி வருகிறார்'' என்று கூறியுள்ளார். கமல்ஹாசன் நகைச்சுவை நடிகரா? அல்லது தமிழக அரசியல்வாதிகள் நகைச்சுவைவாதிகளாக மாறப்போகிறார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.