ஹீரோ அந்தஸ்து பெறும் மற்றொரு காமெடி நடிகர்

  • IndiaGlitz, [Saturday,December 19 2015]

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக வலம் வந்த கவுண்டமணி, வடிவேல், விவேக், சந்தானம் ஆகியோர் ஹீரோவாகவும் வெற்றி பெற்று வரும் நிலையில் இந்த பட்டியலில் தற்போது வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான இமான் அண்ணாச்சியும் இணைந்துள்ளார்.

தனது நெல்லைத்தமிழ் மற்றும் பாடி லாங்குவேஜ் ஆகியவற்றால் ரசிகர்களை நகைச்சுவை கேரக்டர்கள் மூலம் மகிழ்வித்த வரும் இமான் அண்ணாச்சி முதல்முறையாக ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இயக்குனர் ரவிதம்பி இயக்கவுள்ள 'குட்டிப்பட்டாளம்' என்ற படத்தில்தான் இமான் அண்ணாச்சி ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் 27 குழந்தை நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாகவும், அந்த குழந்தைகளை வழிகாட்டும் ஒரு நல்லவர் கேரக்டரில் இமான் அண்ணாச்சி நடிப்பதாகவும் கூறப்படுகிறது

விஜய் மில்டனின் 'கோலி சோடா', தனுஷின் 'மரியான்', விஜய்யின் 'ஜில்லா', 'புலி' உள்பட இமான் அண்ணாச்சி பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சந்தானம் படத்தை இயக்கும் மணிரத்னம் உதவியாளர்

சந்தானம் ஹீரோவாக நடித்த 'இனிமே இப்படித்தான்' படத்தின் வெற்றிக்கு பின்னர் தொடர்ந்து ஹீரோ சப்ஜெக்ட் படங்களாக நடித்து வரும் நிலையில் தற்போது ...

ரஜினி படத் தயாரிப்பாளருடன் இணைந்த 'ரஜினிமுருகன்' இயக்குனர்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தை இயக்கிய இயக்குனர் பொன்ராமின் 2வது படமான 'ரஜினிமுருகன்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....

ரஜினியின் 'எந்திரனுக்கு ஜல்லிக்கட்டால் சிக்கல்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட எந்திரன் 2' படத்திற்கு எமிஜாக்சனால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது...

'தங்க மகன்' திரைவிமர்சனம்.

'வேலையில்லா பட்டதாரி' என்ற வெற்றி படத்திற்கு பின்னர் மீண்டும் தனுஷ்-வேல்ராஜ் இணைந்த படம், சமந்தா...

மூன்று மொழிகளில் ரீமேக் ஆகும் 'ஈட்டி'

அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் இயக்குனர் ரவி அரசு இயக்கிய ஈட்டி' கடந்த வெள்ளியன்று ரிலீஸாகி ஊடகங்கள்...