கவுண்டமணி உடல்நலன் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி
Sunday, September 18, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
காமெடி கிங் கவுண்டமணி உடல்நலம் குறித்து தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கவுண்டமணியின் செய்தி தொடர்பாளர் விஜயமுரளி அறிக்கை ஒன்றை பத்திரிகையாளர்களுக்கு வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
'அவ்வப்போது நடிகர் கவுண்டமணி குறித்து இதுமாதிரி புரளிகள் கிளப்பிவிடும் அந்த நல்ல மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. இதனால் அவர்களுக்கு என்ன பலன் என்றும் புரியவில்லை. சமீபத்தில்கூட புன்னகை அரசி கே.ஆர்.விஜயா குறித்து இதேபோல் வதந்திகளை பரப்பினார்கள். அவர் அறிக்கை வந்ததும் வதந்திகள் புஸ் என்று ஆனது
சற்று முன்புதன் அவரை சந்தித்தேன். 'உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கிறேன். புதிய படம் ஒன்றின் கதையை கேட்டு கொண்டிருக்கிறேன். விரைவில் நான் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளிவரும். அந்த படத்தின் துவக்கவிழாவில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன்' என்று கூறினார். கடல் கடந்து உள்ளவர்கள், இந்தியா முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம். அவர் மிகவும் நலமாக இருக்கிறார்..
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments