சந்தானம் தனது பாணியை மாற்றி கொள்வது நல்லது: காமெடி நடிகர் ஜார்ஜ்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் கடந்த பல வருடங்களாக காமெடி மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருபவர் ஜார்ஜ். குறிப்பாக தெய்வத்திருமகள், ஆம்பள, கலகலப்பு, கலகலப்பு 2 உள்பட பல படங்களில் அவரது சிறப்பான நடிப்பு வெளிப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ஜார்ஜ் கூறியதாவது: நான் காமெடியனாக நடித்து வருவது மக்களுக்கு பிடித்து வருகிறது. ஆனால் எனக்கு கேரக்டர் ரோல் செய்வதில் தான் விருப்பம். எனக்கு அஜித், விஜய் உள்பட பலரது நடிப்பு பிடிக்கும். மெர்சல் படத்தில் விஜய் எங்கேயோ சென்றுவிட்டார். ஆனால் எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் கமல்ஹாசன் தான். அவரது நடிப்பை இன்னொருவர் தொட குறைந்தது ஐம்பது வருடங்களாவது ஆகும். அதேபோல் கேரக்டருக்காக மெனக்கிடுவதில் விக்ரமை அடித்து கொள்ள ஆளே இல்லை. அவர் தனது அனுபவத்தை எங்களுடன் இமேஜ் பார்க்காமல் பகிர்ந்து கொள்வார்.
இயக்குனர்களில் ஷங்கர் மிக உயரத்தில் உள்ளார். அவர் அளவுக்கு யோசிக்க ஆளே இல்லை. பிரியதர்ஷன் இயக்கத்தில் காஞ்சிவரம், நிமிர் போன்ற படங்களில் நடித்தது மனதிற்கு சந்தோஷமாக இருந்தது.
சந்தானம் அவர்கள் திரைப்படங்களில் என்னை கலாய்த்து பல படங்களில் வசனம் பேசியுள்ளார். இந்த வசனங்கள் சில நேரத்தில் மனதிற்கு ஒருசிறு வருத்தத்தை தந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வதால் நாங்கள் அதை டேக் இட் ஈசியாக எடுத்து கொள்கிறோம். கவுண்டமணி-செந்தில் காமெடியில் செந்தில் ஏதாவது ஏடாகூடமாக செய்யும்போதுதான் கவுண்டமணி திட்டுவார். ஆனால் சந்தானம் ஒருவரது உருவ அமைப்பை கேலி செய்யும் வகையில் வசனம் பேசுவார். அதை அவர் மாற்றி கொண்டால் நல்லது.
இவ்வாறு ஜார்ஜ் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com