பையன்னா இப்படி இருக்கணும்: சின்னி ஜெயந்த் மகனுக்கு கிடைத்த மரியாதை.. வைரல் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஐஏஎஸ் முடித்து தற்போது துணை கலெக்டராக பணி செய்து வரும் நிலையில் அவருக்கு மக்கள் மத்தியில் கிடைத்த மரியாதை குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களுடன் காமெடி நடிகராக நடித்த நடிகர் சின்னி ஜெயந்த். தனது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணனை ஐஏஎஸ் படிக்க வைத்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஐஏஎஸ் முடித்த ஸ்ருதன் ஜெய் நாராயணன், அதன் பின் அவர் பயிற்சி முடிந்து மத்திய அரசின் சில பதவிகளில் இருந்தார்.
இதன் பின்னர் தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் துணை கலெக்டராக பணிபுரிந்த நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் துணை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர் வாழும் பகுதிகளுக்கு நேரடியாக சென்ற ஸ்ருதன் ஜெய் நாராயணன் மக்களின் குறைகளை கேட்டு அறிந்தார். வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனையும், வீட்டுமனை பட்டா உள்ளவர்களுக்கு வீடு கட்டுவதற்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார்.
மேலும் அங்கு இருந்த நரிக்குறவர் பெண்கள் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு தங்கள் கையால் செய்த பாசி மாலைகளை அணிவித்து மகிழ்ந்தனர். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ஒரு காமெடி நடிகர் தனது மகனை எவ்வளவு நல்லவிதமாக வளர்த்துள்ளார், பையன்னா இப்படி இருக்கணும் என்று கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com