உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா? காமெடி நடிகர் மகனை பார்த்து ஆச்சரியமடைந்த ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Monday,January 04 2021]

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக காமெடி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சாம்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது நடிகர் சாம்ஸ் மகன் யோஹான் சினிமாவில் அறிமுகமாக தயாராகி வருகிறார்

சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்பதற்காகவே முறைப்படி கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியும் தனியார் திரைப்படக் கல்லூரியில் இயக்குனர் பயிற்சியையும் முடித்த யோஹான் அதன் பின்னர் இயக்குனர் ராம் அவர்களிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்

இந்த நிலையில் தற்போது நடிகராக களம் இறங்க தயாராகி விட்டதாக நடிகர் சாம்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். தனக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்தது போலவே தனது மகனுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தனது மகனின் புகைப்படங்களையும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த சினிமா ரசிகர்கள் ’உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா? ஆச்சரியமாக உள்ளது, உங்கள் மகன் திரையுலகில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்’ என்று கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்