2 கிட்னியும் செயலிழந்து உயிருக்கு போராடும் போண்டாமணி: விஜய் நண்பராக நடித்த நடிகர் கண்ணீர் வேண்டுகோள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்து உயிருக்குப் போராடி வருவதாகவும் அவருக்கு உதவி செய்யவும் என்றும் விஜய் படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்த நடிகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஜய் நடித்த ’திருப்பாச்சி’ என்ற படத்தில் விஜய் நண்பராக நடித்தவர் நடிகர் பெஞ்சமின். பல திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்த இவர் சற்றுமுன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், ‘தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர் போண்டாமணி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகவும் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
இலங்கையிலிருந்து வந்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த போண்டாமணி அவர்களுக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தயவு செய்து உங்கள் நண்பர்கள் மற்றும் பிரபலங்களிடம் எடுத்துக் கூறி அவருக்கு உதவி செய்ய வேண்டும் அவர் கண்ணீருடன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
#Watch | இரு கிட்னியும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் நடிகர் போண்டாமணிக்கு உதவ நடிகர் பெஞ்சமின் கோரிக்கை #SunNews | #BondaMani | #Benjamin pic.twitter.com/gD4QvnWewc
— Sun News (@sunnewstamil) September 21, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com