காமெடி நடிகர் பாவா லட்சுமணனுக்கு என்ன ஆச்சு.. ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து அதிர்ச்சி தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் காமெடி நடிகர் பாவா லட்சுமணன் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கால் கட்டை விரல் அகற்றப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வைகைப்புயல் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்தவர் நடிகர் பாவா லட்சுமணன். இவரது காமெடி குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் என்பதும் தனித்தன்மையுடன் காமெடி செய்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த பாவா லட்சுமணன் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு கால் கட்டை விரல் அகற்றப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இதனை அடுத்து பாவா லட்சுமணன் விரைவில் குணமாகி மீண்டும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments