அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: பிரபல காமெடி நடிகர் கைது
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்து கடவுள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காமெடி நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முனாவர் பாரூகி என்ற காமெடி நடிகர் சமீபத்தில் தனது நண்பர்களுடன் நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு சென்று உள்ளார். அங்கு அவர் இந்து கடவுள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தைக் கூறியதாக தெரிகிறது. இந்த கருத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இந்து கடவுளையும் மத்திய அமைச்சரையும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காமெடி நடிகர் முனாவர் பாரூகியை கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த நான்கு நண்பர்களையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் காமெடி நடிகர் முனாவர் பாரூகி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments