'குஷி' விஜய் போல் ரிஸ்க் எடுத்த காமெடி நடிகர் அம்பானி சங்கர்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்த 'குஷி’ திரைப்படத்தில் விஜய் ரிஸ்க் எடுத்து நடித்த ஒரு காட்சியை போல காமெடி நடிகர் அம்பானி சங்கர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் அம்பானி சங்கர். இவர் ஆறு, பேரரசு, குசேலன், திரௌபதி, உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கருணாஸ் நடித்த ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படம் மூலம் இவர் பிரபலமானதால் தனது பெயருடன் அம்பானியை இவர் சேர்த்து கொண்டார். கடந்த ஆண்டு வெளியான ‘தீர்க்கதரிசி’ நந்திவர்மன்’ போன்ற படங்களில் நடித்த இவர் ‘புஷ்பா’ திரைப்படத்தில் சுனில் உறவினராக நடித்த ராஜ் திரண்டசு என்பவருக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.
அம்பானி சங்கர் ஒரு சுற்றுலா பிரியர் என்பதும் அவ்வப்போது பல நாடுகளுக்கும் சுற்றுலா செல்லும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவார்
இந்த நிலையில் சமீபத்தில் நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற அம்பானி சங்கர் அங்கே bungee jumping செய்த வீடியோவை பதிவு செய்துள்ளார். ‘குஷி’ திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் விஜய் தத்துரூபமாக செய்த இந்த சாகசத்தை போல், அம்பானி சங்கர் செய்த இந்த சாகசத்தின் வீடியோவுக்கு ஏராளமான லைக் குவிந்து வருகிறது.
மறக்கவே மறக்காது 🥵🥵 pic.twitter.com/G40wkU8he0
— Ambani Shankar (@shankaractor) January 21, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments