'லியோ' ஆடியோ நிகழ்ச்சியை அடுத்து மேலும் ஒரு நிகழ்ச்சி ரத்து.. மன்னிப்பு கேட்ட பிரபலம்..!
- IndiaGlitz, [Thursday,September 28 2023]
சமீபத்தில் தளபதி விஜய் நடித்த 'லியோ’ ஆடியோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த பிரபலம் மன்னிப்பு கேட்டு உள்ளார்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் 'லியோ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்பட இருந்த நிலையில் திடீரென அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பெங்களூரில் பிரபல தென்னாப்பிரிக்கா நகைச்சுவை நடிகர் ட்ரெவர் நோவா என்பவரின் காமெடி நிகழ்ச்சி நடத்தப்பட இருந்தது. இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்த நிலையில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ட்ரெவர் நோவா சமூக வலைதளத்தில் கூறியதாவது: அன்புள்ள இந்தியாவின் பெங்களூர் மக்களே, உங்கள் அற்புதமான நகரத்தில் நிகழ்ச்சியை நடத்த நான் மிகவும் ஆவலுடன் இருந்தேன். ஆனால் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.
நாங்கள் எவ்வளவோ முயன்றும் தொழில்நுட்ப கோளாறு சரி செய்ய முடியவில்லை. எனவே இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலைக்கு மிகவும் வருந்துகிறேன். அனைத்து டிக்கெட் வைத்திருப்பவர்களும் முழு பணத்தை திரும்ப பெறுவதை நாங்கள் உறுதி செய்கிறோம். இது போன்ற நிலை ஏற்பட்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஏஆர் ரகுமான் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மிகப்பெரிய அளவில் சொதப்பிய நிலையில், ’லியோ’ ஆடியோ விழாவும் சில குளறுபடிகளால் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். தற்போது ட்ரெவர் நோவா நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டதை அடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Dear Bengalaru India, I was so looking forward to performing in your amazing city but due to technical issues we’ve been forced to cancel both shows.
— Trevor Noah (@Trevornoah) September 27, 2023
We tried everything but because the audience can’t hear the comedians on stage there’s literally no way to do a show. We’ll make…