சினிமாவில் காமெடியன், அரசியலில் ஹீரோ....! ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு உதவும் எம்.பி...!
- IndiaGlitz, [Saturday,May 15 2021]
மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளை அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வாங்கி தந்துள்ளார், கன்னியாகுமரி எம்.பி விஜய்வசந்த்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகில் உள்ளது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. இங்கு கொரோனா நோயாளிகளின் வசதிக்காக, குமரி எம்.பி விஜய்வசந்த் சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கி மருத்துவமனைக்கு அளித்துள்ளார்.
நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், தினசரி 100-க்கும் அதிகமான உள் மற்றும் வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இங்கு கொரோனா பாதிக்கப்பட்ட 600-க்கும் மேற்பட்ட நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோவிட் தொற்று இருப்பதை கண்டறிய மக்களை இந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதித்தபின், கோவிட் சென்டர்கள் அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள். கொரோனா பணிகளுக்காக மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனம் கூடுதலாக தேவைப்படுவது குறித்து அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து குமரி பாராளுமன்ற உறுப்பினரான, விஜய்வசந்த் சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கி, மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.
இந்த வாகனம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வரவும், குணமடைந்தவர்களை அழைத்து செல்ல விடவும் பயன்படுத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.