வந்துவிட்டது... கொரோனா வைரஸை கொல்லும் அதிநவீன முகக்கவசம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பீதியில் இருக்கின்றனர். ஆனால் இதுவரை தடுப்பூசி, சிகிச்சை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் பட வில்லை. இந்நிலையில் தொடர்ந்து சமூக விலகலில் இருக்குமாறு வலியுறுத்தப் படுகிறோம். ஆனால் பொருளாதாரக் காரணங்களுக்காக வெளியே செல்ல வேண்டிய அத்யாவசியத் தேவையும் ஏற்படத்தான் செய்கிறது. என்னதான் முகக்கவசம் போன்ற பாதுகாப்போடு வெளியே சென்றாலும் கொரோனா வைரஸ் பிடித்துக் கொள்ளுமோ என்ற பயம் எல்லோருக்கும் உள்ளூர இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்தப் பயத்தைப் போக்கும் விதமாக தற்போது ஒரு அதி நவீன முகக்கவசத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இஸ்ரேல் நாட்டின் டெக்னியன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முகக்கவசத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் வைரஸ்களை கொல்லும் விதமாக புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அதன்படி ஒவ்வொரு மாஸ்க்கிலும் ஒரு யு.எஸ்.பி போர்ட் இருக்கும். செல்போன்களை சார்ஜ் செய்வது போல 30 நிமிடங்களுக்கு இந்த முகக்கவசத்தை சார்ஜ் செய்து பயன்படுத்தலாம். அப்படி பயன்படுத்தும்போது முகக்கவசத்திற்குள்ளே இருக்கும் கார்பன் இழைகளுக்குள் 158 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் செலுத்தப்பட்டு வைரஸ் கிருமிகள் முழுமையாக அழிக்கப்படும். மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்து பயன்படுத்தும் வகையில் இந்த முகக்கவசம் உருவாக்கப் பட்டு இருக்கிறது. எந்த உறுதியான பாதுகாப்பு இல்லாத நிலையில் இப்படி ஒரு கண்டுபிடிப்பு வெளியாகி இருக்கிறது. இதனால் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com