வந்துவிட்டது... கொரோனா வைரஸை கொல்லும் அதிநவீன முகக்கவசம்!!!

  • IndiaGlitz, [Thursday,June 18 2020]

 

உலக மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பீதியில் இருக்கின்றனர். ஆனால் இதுவரை தடுப்பூசி, சிகிச்சை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் பட வில்லை. இந்நிலையில் தொடர்ந்து சமூக விலகலில் இருக்குமாறு வலியுறுத்தப் படுகிறோம். ஆனால் பொருளாதாரக் காரணங்களுக்காக வெளியே செல்ல வேண்டிய அத்யாவசியத் தேவையும் ஏற்படத்தான் செய்கிறது. என்னதான் முகக்கவசம் போன்ற பாதுகாப்போடு வெளியே சென்றாலும் கொரோனா வைரஸ் பிடித்துக் கொள்ளுமோ என்ற பயம் எல்லோருக்கும் உள்ளூர இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்தப் பயத்தைப் போக்கும் விதமாக தற்போது ஒரு அதி நவீன முகக்கவசத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இஸ்ரேல் நாட்டின் டெக்னியன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முகக்கவசத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் வைரஸ்களை கொல்லும் விதமாக புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அதன்படி ஒவ்வொரு மாஸ்க்கிலும் ஒரு யு.எஸ்.பி போர்ட் இருக்கும். செல்போன்களை சார்ஜ் செய்வது போல 30 நிமிடங்களுக்கு இந்த முகக்கவசத்தை சார்ஜ் செய்து பயன்படுத்தலாம். அப்படி பயன்படுத்தும்போது முகக்கவசத்திற்குள்ளே இருக்கும் கார்பன் இழைகளுக்குள் 158 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் செலுத்தப்பட்டு வைரஸ் கிருமிகள் முழுமையாக அழிக்கப்படும். மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்து பயன்படுத்தும் வகையில் இந்த முகக்கவசம் உருவாக்கப் பட்டு இருக்கிறது. எந்த உறுதியான பாதுகாப்பு இல்லாத நிலையில் இப்படி ஒரு கண்டுபிடிப்பு வெளியாகி இருக்கிறது. இதனால் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

More News

கௌதம் மேனனுடன் முதல்முறையாக இணையும் தேசிய விருது பெற்ற கலைஞர்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கோலிவுட் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் இந்த ஊரடங்கு நேரத்திலும் பிஸியாக இருப்பவர் இயக்குனர் கௌதம் மேனன் மட்டுமே

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற பதவிக்கான தேர்தல்: மெகா வெற்றிப்பெற்ற இந்தியா!!!

ஐக்கிய நாடுகளின் சபையின் வலிமை மிக்க பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இந்தியா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

சென்னையில் ஊரடங்கு: தென்னிந்திய நடிகர் சங்கம் முக்கிய அறிவிப்பு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகம் என்பதால் இந்த நான்கு மாவட்டங்களிலும் நாளை முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு

இன்று நள்ளிரவு முதல் சென்னையில் முழு ஊரடங்கு: என்னென்ன இயங்கலாம்?

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் இம்மாதம் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்றல்ல ... இரண்டல்ல... 35 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இருக்கிறது ஒரு வங்கி!!! அதிர்ச்சித் தகவல்!!!

கொரோனா ஊரடங்கினால் உலகப் பொருளாதாரமே சரிந்து கிடக்கிறது. இது தெரிந்த விஷயம்தான்