திருச்சியில் இனி புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை: கோமாளி பிரச்சனையில் அதிரடி முடிவெடுத்த தயாரிப்பாளர் சங்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் வரும் 15ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் திருச்சி ஏரியாவில் மட்டும் இந்த படத்தை திரையிட ஒரு சிலர் ரெட்கார்ட் போட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 'கோமாளி' படத்திற்கு தடை செய்வதாகவும் இது சட்டவிரோதம் என்றும் கோமாளி படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து 'கோமாளி' படக்குழுவினர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் திருச்சி ஏரியாவில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து விரிவான விளக்கத்தை அளித்ததோடு, இன்று தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனை குழுவினர்களுடன் இணைந்து ஒரு முடிவை எடுத்துள்ளனர்
ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள 'கோமாளி' திரைப்படத்தை ரிலீஸ் செய்வது குறித்த பிரச்சினைகள் குறித்து நாளை மாலைக்குள் சம்பந்தப்பட்டவர்கள் சுமூகமாக பேசி தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவ்வாறு நடக்காத பட்சத்தில் இனி வரும் காலங்களில் எந்த ஒரு திரைப்படத்தையும் திருச்சி ஏரியாவில் வெளியிடுவதில்லை என்றும் ஒட்டுமொத்தமாக, சுய கட்டுப்பாடுடன் ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து ஒரு அதிரடி முடிவை கோமாளி' படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் மேற்படி விஷயத்தினை புகாராக தயார் செய்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு கொள்ளவும் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout