'தளபதி 63' பட நிறுவனத்துடன் கைகோர்த்த ஜெயம் ரவியின் 'கோமாளி'

  • IndiaGlitz, [Friday,May 03 2019]

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்து முடித்துள்ள திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் 'கோமாளி' என நேற்று வெளிவந்த நிலையில் இந்த படம் தற்போது 'தளபதி 63' பட நிறுவனத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்துடன் கைகோர்த்த தகவல் வெளிவந்துள்ளது.

ஆம், ஜெயம் ரவியின் 'கோமாளி' படத்தின் மல்டிபிளக்ஸ் பார்ட்னராக 'ஏஜிஎஸ் சினிமாஸ்' அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் 'கோமாளி' படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யூக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகிபாபு, கவிதா, சம்பத்ராஜ், நிதின்சத்யா, ரவிபிரகாஷ், பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள 'கோமாளி' படத்தை பிரதீப் ரெங்கநாதன் இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில் பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.