'கோமாளி' இயக்குனரின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் விஜய் கனெக்சன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் உருவான ’கோமாளி’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.
இப்படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்குனராக அறிமுகமான நிலையில் இவருடைய அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அவருடன் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ’லவ் டுடே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டது. இந்த டைட்டிலில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 1997ஆம் ஆண்டு ஒரு படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
#KalpathiSAghoram presents #LoveToday Directed by Pradeep Ranganathan@pradeeponelife @Ags_production #KalpathiGanesh #KalpathiSuresh @thisisysr #Sathyaraj @realradikaa @iYogiBabu @archanakalpathi @aishkalpathi @venkat_manickam pic.twitter.com/hZbk0YmDv2
— Jayam Ravi (@actor_jayamravi) July 3, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com