இப்படியெல்லாம் கூட யோகா செய்ய முடியுமா? 'கோமாளி' நடிகையின் ஆச்சரியமான புகைப்படங்கள்..!
- IndiaGlitz, [Friday,June 21 2024]
ஜெயம் ரவியின் ‘கோமாளி’ திரைப்படத்தில் நடித்த நடிகை இன்று உலக யோகா தினத்தை முன்னிட்டு சில யோகா செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டுள்ள நிலையில் இப்படி கூட யோகா செய்ய முடியுமா என்று ஆச்சரியப்பட்டு ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.
ஜிவி பிரகாஷ் நடித்த ’வாட்ச்மேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. அதன் பின்னர் ஜெயம் ரவியின் ‘கோமாளி’ யோகி பாபு உடன் ’பப்பி’ பிரபுதேவா உடன் ’தேள்’ மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’மன்மத லீலை’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் பிக் பாஸ் கன்னடம் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்பதும் சில வெப் தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் சம்யுக்தா ஹெக்டேவுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பது தெரிந்தது.
அந்த வகையில் இன்று உலக யோகா தினத்தை முன்னிட்டு அவர் சில யோகா செய்யும் புகைப்படங்கள் மற்றும் வித்தியாசமான யோகா வீடியோக்களையும் வெளியிட்டுள்ள நிலையில் இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
மேலும் சம்யுக்தா ஹெக்டே இந்த பதிவில், ‘யோகா கலை மூலம் உடல், மனம் மற்றும் ஆன்மாவின் இணக்கத்தை தழுவுங்கள். அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்! ஒன்றாக யோகா செய்வோம், உள் அமைதியை காண்போம்’ என கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்.