போன வருடம் இதே நாளில் நடந்த சோகம்.. மீண்டு வந்த ஆச்சரியம்.. 'கோமாளி' நடிகையின் வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
போன ஆண்டு ஜூலை 27ஆம் தேதி படப்பிடிப்பு ஒன்றின் போது ஏற்பட்ட விபத்தில் காலில் காயம் ஏற்பட்ட நிலையில் இந்த ஒரு ஆண்டில் தான் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது மீண்டு வந்துள்ளதாக ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ படத்தின் நாயகிகளில் ஒருவரான சம்யுக்தா ஹெக்டே கூறியுள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:
கடந்த ஆண்டு ஒரு கடுமையான ஆண்டாக எனக்கு இருந்தது. ஒரு படபிடிப்பின் போது எனக்கு ஏற்பட்ட விபத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. என்னால் இனிமேல் நடனம் ஆட முடியுமா என்ற கேள்விக்குறி கூட எழுந்தது. அதிலிருந்து மீள்வது என்பது அவ்வளவு எளிதல்ல.
அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் காரணமாக இன்று நான் ஓரளவு குணமடைந்து உள்ளேன். என்னை போலவே விபத்தில் காயம் ஏற்பட்ட சிலருக்கு இரண்டு வருடங்களுக்கு மேலாக குணமாக காலம் எடுத்தது. ஆனால் நான் வலிமையின் உண்மையை கண்டுபிடித்தேன், உடல் ரீதியாக மட்டுமல்ல எனது மனரீதியாகவும் நான் இந்த நோயிலிருந்து விடுபட முடிவு செய்தேன்.
ஒவ்வொரு பின்னடைவையும் வாழ்க்கையின் வளர்ச்சிக்கான வாய்ப்பாக ஏற்றுக் கொண்டேன். காயம் அடைந்து எனக்கு அறுவை சிகிச்சை செய்த பின்னர் ஒரு மாற்றத்தை உணர்ந்தேன். இன்று முழுவதுமாக நான் குணமடையாமல் இருக்கலாம். ஆனால் என்னுடைய விடாமுயற்சி இந்த முக்கிய மாற்றத்திற்கு காரணமாக உள்ளது
இந்த புதிய நம்பிக்கையுடன் நான் சவால்களை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். எந்த பிரச்சனை என்றாலும் அதை சந்திக்கும் வலிமை என்னிடம் உள்ளது என்பதை இந்த நிகழ்வின் மூலம் நான் அறிந்து கொண்டேன். இன்னும் மீதம் இருக்கும் நாளில் நிச்சயமாக நான் முழு குணமடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இதை நான் பகிர்ந்து கொள்வது பெருமைக்காக அல்ல, இதே போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நபர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான். துன்பங்களை வெற்றியாக மாற்ற கூடிய வலிமை நம்மிடம் தான் உள்ளது என்பதை அனைவருக்கும் நினைவூட்டுகிறேன்’ என்று நடிகை சம்யுக்தா ஹெக்டே பகிர்ந்து உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout