தமிழ் தொலைக்காட்சியில் குழந்தைகளின் திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு
- IndiaGlitz, [Friday,March 02 2018]
சமீபத்தில் தமிழில் மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட தொலைக்காட்சி 'கலர்ஸ் தமிழ்'. இந்தியாவின் பல மொழிகளில் முன்னோடியாக இருக்கும் 'கலர்ஸ்' தொலைக்காட்சி தனது மிக வித்தியாசமான மற்றும் தரமான நிகழ்ச்சிகளுக்கு பெயர் போனது.
'கலர்ஸ் தமிழ்' தொலைக்காட்சியில் படிப்பை தாண்டி வியக்கத்தக்க திறமைகளை கொண்ட குழந்தை மையமாக வைத்து 'கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்' என்ற ஒரு ஷோவை தொடங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சி குறித்து சூப்பர் கிட்ஸ்' நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் Blue eyes productions நிர்வாகத்தின் , நிறுவனர் C சுதாகர் கூறியதாவது:
''தொலைக்காட்சியை கண்டு ரசிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் அறிவை வளர்க்கும் வகையிலும், இதுவரை யாரும் காணாத ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தரவேண்டும் என்ற எண்ணமும் பொறுப்பும் எங்களிடம் இருந்தது. படிப்பை தாண்டி பல விஷயங்களும் திறமைகளும் நிறைய உள்ளது என்பது எங்களது எண்ணம் பலரால் வரவேற்கப்பட்டுள்ள்ளது. திறமைகளுக்கு பஞ்சமே இல்லாத மண் நம்முடையது. நங்கள் தேடி கண்டுபிடித்து இந்த ஷோவிற்கு கொண்டு வரும் திறமையான குழந்தைகள் உலக அளவில் கண்டறியப்படுவார்கள் என நம்புகிறேன். குழந்தைகளின் தன்னம்பிக்கையை பாதிக்கும் 'மதிப்பெண் கொடுப்பது மற்றும் நீக்குதல்' என்ற விஷயமே இந்த ஷோவில் கிடையாது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணி முதல் 9 மணி ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் ரசித்து மகிழ்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் 'Mirchi ஷிவா' தொகுத்து வழங்குவார். இந்த அபரிமிதமான திறமைகளை கொண்ட குழந்தைகளோடு கலகலப்பான உரையாடல்களை அவர் மேற்கொள்வர். அவர்களின் அழகான குழந்தைத்தன்மையை அவர் வெளிகொண்டுவருவார். இந்த குழந்தைகள் பார்ப்பவர்களை நிச்சயம் ஆச்சிரியப்பட வைப்பார்கள் என்பது உறுதி. இதை தவிர அதிரடி சிறப்பு விருந்தினர்கள், குழந்தைகளின் திறமைகளை அலச வல்லுனர்களின் கருத்து , ஆகியவை இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாகும். அபாரமான திறமைகளை கண்டெடுத்து மக்களை ஆசிரியத்தில் ஆழ்த்துவதற்காக எங்களது அணி முழு நேரம் உழைத்துவருகிறது.''