செப்-1-ல் கல்லூரிகள் திறக்கப்படும்.....! மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன.....?

  • IndiaGlitz, [Wednesday,August 25 2021]

தமிழக அரசு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகளை திறக்கலாம் என அறிவித்துள்ளது.


கொரோனா பெரும் தொற்று காரணமாக, கடந்த ஒன்றரை வருடமாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், மாணவர்கள் ஆன்லைன் வழியாக பாடங்களை கற்று வருகின்றனர். தற்போது தொற்றின் வீரியம் குறைந்த நிலையில், செப்டம்பர் 1 முதல் கல்லூரிகளை திறக்கலாம் என தமிழக அரசு கூறியுள்ளது. அந்த வகையில் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

என்னென்ன நெறிமுறைகள்....?

*** சில கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில், அந்த கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைனிலே தொடரும்.

*** கல்லூரிகள் திறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே முழு வளாகத்தையும் தூய்மைபடுத்தி வைத்திருக்க வேண்டும்.

*** கல்லூரிக்குள் அனுமதிக்கக்கூடிய மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் என அனைவரும், தங்களுடைய 2 டோஸ் தடுப்பூசிகளை கட்டாயம் போட்டிருக்க வேண்டும். அப்படி பணியாளர்களோ, ஆசிரியர்களோ தடுப்பூசி போடாத நிலையில் அவர்கள், கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள்.

*** தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு அங்கேயே தடுப்பூசி செலுத்த, கல்லூரி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

*** மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிக்கு கட்டாயம் வரவேண்டும் என்று அவசியமில்லை.

*** மாணவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால், அவர்களுடன் இருந்த நபர்களுக்கும் கட்டாய RT – PCR சோதனை செய்ய வேண்டும்.

*** கல்லூரி நுழைவு வாயிலில் நிர்வாகம் சார்பாக, கண்காணிப்பு குழு ஒன்றை அமைத்து, பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை சோதனையிடவேண்டும்.

More News

காவல்துறையில் புகார் அளித்த சூர்யாவின் 2D நிறுவனம்: காரணம் இதுதான்!

சூர்யாவின் 2டி நிறுவனத்தின் சார்பில் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து 2டி நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

யோகி பாபு படத்தின் தலைப்பு மாற்றப்பட்டது....! காரணம் இதுதானாம்....!

யோகி பாபு நடிக்கும் திரைப்படத்திற்கு, வீரப்பன்  குடும்பத்தினர் கேட்டு கொண்டதற்கு இணங்க, தலைப்பில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் விஜய்சேதுபதியின் அடுத்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது

ஒன்றல்ல, இரண்டு படங்களையும் முடித்துவிட்டேன்: ஜெயம் ரவி

ஒன்றல்ல இரண்டு படங்களின் படப்பிடிப்புகளையும் முடித்து விட்டேன் என ஜெயம்ரவி சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

அமெரிக்க பிரஜை என்பதற்கே வெட்கப்படுகிறேன்… பிரபல ஹாலிவுட் நடிகை கடும் சாடல்!

உலகப் பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தற்போது ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் சூழல் குறித்து கடும் வருத்தம் வெளியிட்டு வருகின்றனர்.