செப்-1-ல் கல்லூரிகள் திறக்கப்படும்.....! மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன.....?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக அரசு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகளை திறக்கலாம் என அறிவித்துள்ளது.
கொரோனா பெரும் தொற்று காரணமாக, கடந்த ஒன்றரை வருடமாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், மாணவர்கள் ஆன்லைன் வழியாக பாடங்களை கற்று வருகின்றனர். தற்போது தொற்றின் வீரியம் குறைந்த நிலையில், செப்டம்பர் 1 முதல் கல்லூரிகளை திறக்கலாம் என தமிழக அரசு கூறியுள்ளது. அந்த வகையில் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
என்னென்ன நெறிமுறைகள்....?
*** சில கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில், அந்த கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைனிலே தொடரும்.
*** கல்லூரிகள் திறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே முழு வளாகத்தையும் தூய்மைபடுத்தி வைத்திருக்க வேண்டும்.
*** கல்லூரிக்குள் அனுமதிக்கக்கூடிய மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் என அனைவரும், தங்களுடைய 2 டோஸ் தடுப்பூசிகளை கட்டாயம் போட்டிருக்க வேண்டும். அப்படி பணியாளர்களோ, ஆசிரியர்களோ தடுப்பூசி போடாத நிலையில் அவர்கள், கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள்.
*** தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு அங்கேயே தடுப்பூசி செலுத்த, கல்லூரி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
*** மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிக்கு கட்டாயம் வரவேண்டும் என்று அவசியமில்லை.
*** மாணவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால், அவர்களுடன் இருந்த நபர்களுக்கும் கட்டாய RT – PCR சோதனை செய்ய வேண்டும்.
*** கல்லூரி நுழைவு வாயிலில் நிர்வாகம் சார்பாக, கண்காணிப்பு குழு ஒன்றை அமைத்து, பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை சோதனையிடவேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments